வாக்கு பண்ணப்பட்டவர்மாதிரி

வாக்கு பண்ணப்பட்டவர்

5 ல் 4 நாள்

உலகின் ஒளி

நாம் அனைவரும் உடல் ரீதியாகவோ, உணர்வு ரீதி யாகவோ, மன ரீதியாகவோ அல்லது ஆன்மீக ரீதியா கவோ   ஏதாவது ஒரு வகையில் அந்தகாரத்தை அனுபவித்திருக்கிறோம் நமக்கு உதவியோ   நம்பிக்கை யோ தேவைப்படும் போது,   வெளிச்சம் இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளுதல்மாத்திரம் தீர்வாக ஆகாது, அது நமக்குள் இருக்கிறதாக ஆக வேண்டும்! ஒளியின் அருகாமையே நமக்கு நம்பிக்கையைக்   கொடுக்கிறது. 

ஒளி நம் கண்களோடு இணைந்து செயல்படுகிறது. ஒளியும் பார்வையும் ஒன்றோடொன்று இணைந் திருக்கிறது. லூக்கா 2-இல் தேவதூதர்கள் மேய்ப்பர் களுக்கு முன்பாகத் தேவ மகிமையின் பரகாசத்துடன் தோன்றினார்கள். (வச. 9). தேவதூதரால் சொல்லப் பட்டதை மேய்ப்பர்கள் போய் காணமுடிந்தது. (வச.15) மேலும் இயேசு பிறந்திருக்கிறார் என்று கண்டதும் அவர்கள் தேவனை துதித்தார்கள். (வச. 20)

எட்டு நாட்களுக்குப் பின்னர், இயேசுவை பிரதிஷ்டை செய்யும்படி   தேவாலயத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு தேவனுடைய வாக்குத்தத்தத்தோடு சிமியோன்   காத்திருந்தான்.  மேசியா வந்துவிட்டார்   என்று அவன் உணர்ந்த மாத்திரத்திலே அவன் ஒரு தீர்க்கதரிசனப் பாடலைப் பாடினான்: 

"புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்மு டைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம் பண்ணின,   உம்முடைய இரட்சணியத்தை என்   கண்கள் கண்டது என்றான்." (லூக்கா 2:30-32)

இயேசுவின் ஒளி தேவனுடைய இரட்சிப்பில்   இருப்பது என்னவென்று அறியும்படி சிமியோனின் கண்களைத் திறந்தது. அந்த இரசிப்பானது ஒரு பட்டணத்திற்கோ அல்லது ஒரு நாட்டிற்கோ மட்டுமல்ல அது முழு உலகத்திற்கே உண்டாகும் இரட்சிப்பாகும்.

இயேசு பரலோகத்தில் இருந்து பூமியின் அந்தகாரத் திற்குள் குழந்தை உருவில் அடியெடுத்து   வைத்தார். வேதாகமம் இதனை ஒரு அவதாரம் என்கிறது. நம்மேல் வைத்த அன்பினாலே, அவர் மனிதானாக ஆனார். அவரது வெளிச்சம், நம்முடைய பரலோகத் தந்தையிடம் நாம் திரும்பிச்   செல்லும் இரட்சிப்பின் வழியை நமக்கு வெளிப்படுத்தியது. இது ஒரு ஆச்சரியமான   அன்பின் மகத்துவமான திட்டம்! 

இயேசுவின்   மூலமாக தேவன் நம்மிடம் வந்திருக்கிறார் – அவர் நமக்கருகிலே இருக்கிறார். இதை   உங்களால் உணர முடியாவிட்டாலும் கூட, இப்பொழுது அவருடைய பிரசன்னம்   உங்களோடு இருக்கிறது. இந்த உண்மை உங்களை எந்த வகையில் பாதித்திருக்கிறது?

இன்றைய ஜெபம்: ஆண்டவரே, உம்முடைய குமாரனுடைய   வெளிச்சத்திற்காக நன்றி. உம்முடைய இரசிப்பைக் காணும்படியும், என்மேல் நீர் வைத்துள்ள   உம்முடைய நிலையான அன்பினாயும் நான் அறிந்துகொள்ளும்படியும் என்னுடைய கண்களைத்   திறந்தருளும். உம்முடைய நம்பிக்கையின் செய்தியை நான் என் பட்டணத்தையும் தேசத்தையும் தாண்டி முழு உலகத்திற்கும் எடுத்து செல்வேனாக. ஆமென்.

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

வாக்கு பண்ணப்பட்டவர்

உலகின் ஒளியாகிய இயேசு, நம் மத்தியில் வசிப்பதற்க்காக, நம்மைப்போல மனிதனாக   அவதரித்த அந்த தருணம் தான் இவ்வுலகத்தின் மிக மிக முக்கியமான தருணம் ஆகும். அவரின்   வருகையை தேவதூதர்கள் அறிவித்தனர், கவிதைகள் எழுதப்பட்டன, மேய்ப்பர்கள்   அவரைக்காண விரைந்தனர், மரியாள் பாடினாள்! அவரின் ஒளி எப்படி   அவரோடிருந்தவர்களுக்கு ஊக்கம் கொடுத்தது என்பதையும், மற்றும் இன்று   நமக்கு எவ்வகையில் ஊக்கம் கொடுக்கிறது என்பதனை அனுபவித்து அறியும்படி, இந்த ஐந்து நாட்கள்   பயணத்தில் எங்களோடு இணைந்துகொள்ளுங்கள் 

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக லுமோ மற்றும் ஒன் ஹோபிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://www.lumoproject.com/