வாக்கு பண்ணப்பட்டவர்மாதிரி

வாக்கு பண்ணப்பட்டவர்

5 ல் 5 நாள்

ஜெயமுள்ள வல்லமை 

உலகின் ஒளியானது மிகவும் தாழ்மை, மாட்டுத்தொழு வத்தில் கிடத்தப்பட்ட   குழந்தையாக இந்த உலகிற்குள் வந்தது. தேவதூதர்கள் பாடி அறிவித்திருந்தும், அதைக் கேட்டு மேய்ப்பார்கள்   ஓடிச்சென்று அவரைப் பார்த்தி ருந்தும்,   பெத்லகேம் பட்டணத்திற்கு சமாதான பிரபு வின் வருகை தெரியாத காரியமாகவே இருந்தது

ஆனால் அந்த உலகின் ஒளி இருளை வென்றபோது, அதை அனைவரும் பார்க்கும்படி எல்லாருக்கும் காணப்பட்டது.   ரோம அரசு,   யூத மதத்தலைவர்கள் மற்றும் பஸ்க்காவை கொண்டாடும்படி பட்டணத்தில் கூடிவந்திருந்த ஆயிரக்கணக்கான   யூதர்கள் அனை வரும் அதைக் கண்டனர்   இயேசு விசாரிக்கப்பட்டு, வாரினால் அழக்கப்பட்டு எல்லார் முன்பாகவும் கொலை செய்யப்பட்டார். இது ஆவிக்குரிய மற்றும் மாம்சத்திற்குரிய அந்தகாரத்தின் மத்தியில் நிறைவேற்றப்பட்டது. (லூக்கா 23:45-46), இயேசு விருப்பத்துடன் தம்முடைய ஜீவனை ஈந்துக்   பாவத்தின் வல்லமையை தகர்த்தார். 

இயேசு தன்னை காப்பாற்றிக்கொள்ளும்படி வரவில்லை, மாறாக அவர் இந்த உலகத்தை இரட்சிக்க   வந்தார். மோரியா மலையின் உச்சியிலே சிலுவையின் மீது அந்த ஜெயம் கிடைத்தது! இயேசு   மரித்த உடனே, தேவாலயத்தின்   திரைச்சீலை இரண்டாக கிழிந்து,   எல்லோரும் தேவப்பிரசன்னத் திற்கு போக வழி வகுத்தது. அந்த   தருணத்திலே, நூற்றுக்கு அதிபதி   ஒருவன், தேவ வல்லமை   வெளிப்பட்டதை இயேசுவின் மரணத்திலே கண்டு, “மெய்யாகவே இவர் தேவனுடைய   குமாரன்” என்று அறிக்கை செய்தான்! (மத்தேயு 27:54) 

அடுத்து,   அவர் சொன்னபடியே,   மூன்று நாட்களுக்குப் பின்னர்,   உயிர்த்தெழுந்தார்! அவருடைய உயிர்த்தெழுதல் பாவத்தை மட்டுமல்ல பாதாளத்தையும்   அவர் வென்றார் என்பதை பறைசாற்றியது! மரணம் நிரந்தரமாக தோற்கடிக்கப்பட்டது, நாம் அதை அறிவிக்க வேண்டும்.

ஏசாயா 25:9 - "இதோ, இவரே நம்முடைய   தேவன்; இவருக்காகக்   காத்திருந்தோம், இவர் நம்மை   இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்."

நம்முடைய மகிமையின் தேவன் வெற்றி சிறந்தார், இயேசுவின் பிறப்பு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக எல்லா   மக்களுக்கும் இரட்சிப்பை அளிக்கிறார்.   இதுதான் கிறிஸ்துமஸின் செய்தி. இதற்காகத்தான் அந்த ஒளி வந்தது. எனவே   இருளும் மரணமும் இனி நம்மேல் அதிகாரம் செலுத்த முடியாது.   கிறிஸ்துவின் மூலமாக நாம் மன்னிப்படைகிறோம்!

உங்களுடைய   சொந்த வாழ்க்கையில் இயேசு எவ்விதமான பாவங்களை ஜெயித்திருக்கிறார்? அவருடைய ஜெயமுள்ள வல்லமையைக் குறித்து எவரிடமாவது கூறியிருக்கிறீர்களா?

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

வாக்கு பண்ணப்பட்டவர்

உலகின் ஒளியாகிய இயேசு, நம் மத்தியில் வசிப்பதற்க்காக, நம்மைப்போல மனிதனாக   அவதரித்த அந்த தருணம் தான் இவ்வுலகத்தின் மிக மிக முக்கியமான தருணம் ஆகும். அவரின்   வருகையை தேவதூதர்கள் அறிவித்தனர், கவிதைகள் எழுதப்பட்டன, மேய்ப்பர்கள்   அவரைக்காண விரைந்தனர், மரியாள் பாடினாள்! அவரின் ஒளி எப்படி   அவரோடிருந்தவர்களுக்கு ஊக்கம் கொடுத்தது என்பதையும், மற்றும் இன்று   நமக்கு எவ்வகையில் ஊக்கம் கொடுக்கிறது என்பதனை அனுபவித்து அறியும்படி, இந்த ஐந்து நாட்கள்   பயணத்தில் எங்களோடு இணைந்துகொள்ளுங்கள் 

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக லுமோ மற்றும் ஒன் ஹோபிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://www.lumoproject.com/