இவைகளில் அன்பே பிரதானம்மாதிரி

இவைகளில் அன்பே பிரதானம்

26 ல் 10 நாள்

தன் தகப்பனோடு காரில் சென்ற ஒரு சிறுவனைக் குறித்து சமீபத்தில் வாசித்தேன். வழக்கம்போல சாலைகளில் போக்குவரத்து அதிகமாயிருந்தது. அந்த தகப்பன் மற்றவர்களைக் குறித்த அக்கறை கொஞ்சம் கூட இல்லாமல் கண்மூடித்தனமாக காரை ஓட்டிச் சென்றார். சாலையில் வண்டி ஓட்டி வந்த மற்றவர்களை திட்டிக்கொண்டே இருந்தார். கடைசியில் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். மாலையில் அந்த சிறுவன் தன் தாயுடன் காரில் சென்றான். அவர்கள் காரை மிக நேர்த்தியாக ஓட்டிச் சென்றார்கள். வேலை முடிந்து அவசர அவசரமாய் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த மக்களை கண்ட அந்த தாய், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக என்று சொன்னார்கள். அம்மா அப்படி சொல்வதைக் கண்ட அந்த சிறுவன், “அம்மா, அந்த முட்டாள்களெல்லாம் எங்கே போனார்கள்” என்று கேட்டான். “முட்டாள்களா?” என்று அம்மா கேட்டார்கள். “ஆம், இன்று காலை அப்பாவுடன் காரில் சென்றபோது நாங்கள் ஏழு முட்டாள்களை பார்த்தோம்!” என்றான் அந்த சிறுவன்.

நாம் வாழும் இடங்களில், நமக்கு ஏற்படும் எரிச்சலான சூழ்நிலைகளில் தேவ வகையான அன்பு மட்டுமே மிகச் சிறந்த மருந்தாகும். எரிச்சல் என்னும் பாவம் அநேக குடும்பங்கள், அலுவலகங்கள், தங்கும் விடுதிகள், வங்கியில் நிற்கும் மக்கள் வரிசைகள், உணவகங்கள், மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் என எல்லா இடத்திலும் மக்களின் நிம்மதியை குலைத்துக் கொண்டிருக்கிறது.

நீங்கள் எவ்வளவு ஆவிக்குரியவர் என்பதை ஞாயிறு ஆராதனை வேளையில் அறிய முடியாது, உங்கள் பிள்ளை உங்களுக்கு எரிச்சலூட்டும் விதத்தில் வீட்டில் எதையாவது செய்யும்போது மட்டுமே அறிய முடியும். விசுவாசம் இருக்கிறதா இல்லையா என்பதை ஞாயிறன்று கர்த்தருடைய பந்தியில் கலந்து கொள்வதை வைத்து அறியமுடியாது; மாறாக, திங்கள் காலை உணவு மேஜையில் உட்காரும்போது மட்டுமே அறிய முடியும்.

அந்நியரை புன்சிரிப்புடன் வரவேற்கும் நாம், நமது குடும்பத்தில் உள்ளவர்களை புறக்கணித்து வேதனைக்குள்ளாக்குகிறோம். தேவ வகையான அன்பை வெளிப்படுத்துவதற்கு மிகவும் கடினமான ஒரு இடம், குடும்பம். நான் சொல்வதை நம்புங்கள்; சிலருடன் பழகுவது முள்கம்பி வேலியை விட மிகவும் கடினமாயிருக்கும்.

வேதவசனங்கள்

நாள் 9நாள் 11

இந்த திட்டத்தைப் பற்றி

இவைகளில் அன்பே பிரதானம்

கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார். 

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய https://christchapel.in/ க்கு செல்லவும்.