தேவனுக்கே முதலிடம் கொடுங்கள்மாதிரி
“தேவனுடைய இடம், என்னுடைய பரிசு”
முதல் இடம் – போட்டியிடுகிற அனைவருக்குமே இதன்மீதுதான் கண். தனிநபர் போட்டியானாலும், குழுப்போட்டியானாலும் போட்டியில் முடிவில் பெறுகிற புள்ளிகளோ அல்லது எடுத்துக்கொண்ட நேரமோ வெற்றி பெற்றவருக்கு உச்சிதமான பரிசைக்கொடுக்கிறது. ஆனால், இந்த நடைமுறைக்கு ஒரே ஒரு விலக்கு எப்போதுமே உண்டு.
இரட்சிப்புக்கு முன்னர், பொதுவாக நமது வாழ்வில் முதலிடம் நமக்குத்தான் – ந
மக்காகவே வாழ்வது, நமது இலட்சியங்களை நிறைவேற்றுதல், நமது திட்டங்களை முன்னெடுத்தல் இவைகளுக்கே முதலிடம். ஆனால், நாம் கிறிஸ்தவனான போதோ, முதலிடம் என்பது நமக்குரியதல்ல; அது தேவனுக்குரியது.
நாம் இரட்சிக்கப்பட்ட நாளிலே தேவனுக்கு முதலிடம் கொடுக்கத் தொடங்கி விடுகிறோம். ஆனால், நமது வாழ்வின் எல்லாப்பகுதிகளிலும் அவர் முதலிடத்தில் அமர்ந்திருக்கச் செய்வது அனுதினமும் தொடரவேண்டிய செயல். நாம் அப்படிச் செயல்படும்போது, இவ்வுலகில் கிறிஸ்துவுக்குள் நிறைவான ஆசீர்வாதம் மிக்க வாழ்க்கை வாழ்வதோடு, மறுவுலகிலும் சொல்லவொண்ணா ஆசீர்வாதம் நிறைந்த நித்தியவாழ்வைத் தேவனோடு என்றென்றும் வாழ்வோம்.
“பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்” – I கொரி 9:25..
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நமது வாழ்வில் தேவனுக்கு முதலிடம் கொடுப்பது என்பது ஒரேயொருமுறை நடக்கும் செயல் அல்ல; அது, ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் வாழ்நாளெல்லாம் நடக்கும் தொடர்நிகழ்வு. நீங்கள் பலவருட அனுபவம் மிக்க கிறிஸ்தவரானாலும் சரி, புதிய விசுவாசியானாலும் சரி, வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வுக்கு பலனுள்ள வியூகமாக இருக்கிற இந்த வாசிப்புத்திட்டம், உங்களால் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், நடைமுறையில் பயிற்சிக்கக்கூடியதாகவும் இருக்கும். இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் ட்வென்டி 20 நம்பிக்கை, இன்க் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க:
http://www.twenty20faith.org/yvdev2/#googtrans(ta)