தேவனுக்கே முதலிடம் கொடுங்கள்மாதிரி
“வெற்றி வாழ்க்கை வாழ ஐந்து அம்ச வியூகம்”.
பாவத்தையும் சோதனைகளையும் வெற்றிகரமாக மேற்கொள்ளத் தேவையான ஐந்து அம்சத் திட்டத்தை இந்தப்பகுதி விளக்குகிறது. இந்த வாசிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, தேவனுக்கு உங்கள் வாழ்வில் முதல் இடத்தைக் கொடுப்பதற்கான இன்னொரு வழியாகும்!
1. இயேசு கிறிஸ்துவின் கிரியையினால், உங்களைக் குற்றமற்றவராக, பரிசுத்தவானாக, பூரணமானவராகவே தேவன் பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். (2 கொரிந்தியர் 5:21-ஐ வாசியுங்கள்) அனேக சமயங்களில், குற்ற உணர்வும், வெட்கமுமே பாவத்தின் மிக மோசமான விளைவுகளாக உள்ளன. கிறிஸ்துக்குள் வாழ்பவர்களுக்கு, அவர்கள் பாவத்தினால் வரக்கூடிய ஆக்கினைத்தீர்ப்பு கிடையாது என்று புரிந்துகொள்வதே வெற்றிக்கு முதல் அடிப்படை. (ரோமர் 8:1)
2. உங்கள் பாவங்களை அறிக்கை செய்யுங்கள் (1யோவான் 1:9-ஐ வாசியுங்கள்). பாவ அறிக்கை என்பது முதலாவதாக நமது உள்ளத்திலும், புத்தியிலும் நமது பாவத்தை உணர்ந்து அறிக்கை செய்து பின்னர் தேவனிடம் அறிக்கை செய்வது. பாவ அறிக்கை என்பது எல்லார் முன்பாகவாகவும் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. அது உங்களுக்கும் தேவனுக்கும் இடையிலான விஷயம்.
3. கணக்கு ஒப்புவிக்கும் கடமைக்கு உட்படுங்கள் (யாக்கோபு 5:16-ஐ வாசியுங்கள்) நீங்கள் போராட்டங்களைச் சந்திக்கும்போதெல்லாம் உங்கள் நிலையைப் பகிர்ந்துகொள்ள நம்பிக்கைக்குரிய் கிறிஸ்தவ நண்பர், போதகர் அல்லது குடும்ப நண்பர் ஒருவரைத் தெரிந்துகொள்வதே கணக்கொப்பித்தலுக்கும், ஜெப ஆதரவுக்குமான முதல் வேலை.
4. சோதிக்கும் காரணியை (சூழ்நிலை அல்லது மனிதர்) தவிர்த்துவிடுங்கள் (யாக்கோபு 1:13-15-ஐ வாசியுங்கள்) இது மிகவும் கடினமான படி. இதற்கு மூளையை உபயோகித்து ஆக்கபூர்வமாகத் திட்டமிட வேண்டும். உண்மை என்னவென்றால், சோதனையைத் தவிர்க்கக் கூடுமானால், பாவத்தைத் தவிர்த்துவிடலாம்.
5. தேவனுடைய வார்த்தையை வாசியுங்கள் (சங்கீதம் 119:11)-ஐ வாசியுங்கள்) வேதம் நமக்கு எளிமையாகச் சொல்வதுபோல, வேதவசனத்தை நாம் “நமது இருதயத்தில் வைத்து வைத்திருப்பதால்” பாவத்துக்கும், சோதனைகளுக்கும் உடன்படாமல் மறுதலிக்க நமக்கு விசேஷமான பலத்தைத் தருகின்றது.
இந்த திட்டத்தைப் பற்றி
நமது வாழ்வில் தேவனுக்கு முதலிடம் கொடுப்பது என்பது ஒரேயொருமுறை நடக்கும் செயல் அல்ல; அது, ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் வாழ்நாளெல்லாம் நடக்கும் தொடர்நிகழ்வு. நீங்கள் பலவருட அனுபவம் மிக்க கிறிஸ்தவரானாலும் சரி, புதிய விசுவாசியானாலும் சரி, வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வுக்கு பலனுள்ள வியூகமாக இருக்கிற இந்த வாசிப்புத்திட்டம், உங்களால் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், நடைமுறையில் பயிற்சிக்கக்கூடியதாகவும் இருக்கும். இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் ட்வென்டி 20 நம்பிக்கை, இன்க் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க:
http://www.twenty20faith.org/yvdev2/#googtrans(ta)