தேவனுக்கே முதலிடம் கொடுங்கள்மாதிரி

தேவனுக்கே முதலிடம் கொடுங்கள்

5 ல் 3 நாள்

“உங்களுடைய இருதயத்தில் முதலிடம் வகிக்கத் தேவன் விரும்புகிறார்”

இன்றையச் சமூகத்தில், அனேகர் தங்களைப்பற்றிய மதிப்பீட்டைத் தங்கள்து செல்வத்தின் அடிப்படையிலோ, பெருநிறுவனங்களில் தாங்கள் வகிக்கும் அதிகாரத்தின் அடிப்படையிலோ, தொழிலின் வெற்றி அல்லது இன்னார் இன்னார் தனக்குத் தெரியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலோ அளக்கிறார்கள். 

இப்படிப்பட்ட சுயகணிப்பு நமக்கு இருக்குமானால், இந்தப் பகுதிகளில் நாம் உயர்ந்திருக்கும்போது மட்டுமே நம்மைக்குறித்து நமக்கு சந்தோஷம் உண்டாகும். நமது அடித்தளம் உறுதியாயில்லாத படியால், நமது செல்வமோ, அந்தஸ்தோ குறையும்பொழுது நமது சுயமதிப்பும் குறைந்துபோகிறது; இதனை இயேசு இவ்வாறு கூறினார்:

“என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின் மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து, முழுவதும் அழிந்தது என்றார்”-லூக்கா 6:49.

நமது அடையாளம்   எந்த அஸ்திபாரத்தின் மேல் எழுப்பப்பட்டதோ, அந்த அஸ்திபாரத்தின் உறுதியின் அளவுதான் அடையாளத்தின்   உறுதியும் இருக்கும். என்றும் மாறாத இயேசுகிறிஸ்து என்னும் உறுதியான பாறையின்   மேல் நம் அடையாளம் எழுப்பப்படுமானால், நமது வாழ்வின் நிறைவு அழிந்துபோகும் இவ்வுலக அடிப்படைகளின் மேல்   சார்ந்திராது. 

கிறிஸ்துவே நம் அஸ்திபாரமானால், நமது உறுதி இவ்வாறாக இருக்கும்:

“ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின் மேல் அஸ்திபாரம்போட்டு,   வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக்கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது” – லூக்கா 6:48.

உங்களது அடையாளத்தைக்   கட்டியெழுப்ப அஸ்திபாரமாக எதையெல்லாம் தேர்ந்தெடுக்கமுடியும் என்று ஒருகணம் சிந்தியுங்கள்.   உங்கள் செல்வமா, வேலையா, தோற்றமா, குடும்பப்பெருமையா, புகழா, அல்லது உங்களுக்கு அறிமுகமான   பிரபலங்களா? அல்லது, வேறு எதையாகிலும்   நினைக்கத்தோன்றுகிறதா? நீங்கள் தேர்ந்தெடுக்கும் எல்லா அஸ்திபாரங்களிலும், இயேசுவே வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையை உங்களுக்குத் தரும் ஒரே   அஸ்திபாரம். 

மற்ற அஸ்திபாரங்களெல்லாம்   தீமையானது என்றோ தவறானது என்றோ சொல்லவில்லை. உண்மையில் மற்ற எல்லாமே தேவன் நாம்   இந்த உலகில் நம் பொறுப்புக்களை நிறைவேற்றும்படி நமக்களிக்கும் பொறுப்புக்களே.   மத்தேயு எழுதிய சுவிசேஷத்தில் இயேசு இரண்டுக்கும் நடுவில் ஒரு சமன்பாட்டைத்   தருகிறார்:

“ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்;   என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?” – மத்.6:25-26

இந்த உண்மையை   நம் வாழ்வில் நாம் ஏற்றுக்கொள்வோமாகில், சமாதானத்தையும், நிறைவையும் கண்டுகொண்டு, கவலைகளிலிருந்தும், பயங்களிலிருந்தும் விடுதலை அடைவோம். இயேசுவை நம்   வாழ்வின் எல்லாப்பகுதிகளிலும் முதன்மையாக வைக்கும்போது இந்தச் சமநிலையை நாம்   அனுபவிப்போம்:

“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்”-மத்தேயு 6:33.

தேவன்   வடிவமைத்தபடியே நாம் கனவுகளையும் இலக்குகளையும் லட்சியங்களையும் கொண்டுள்ளோம்.   ஆனால், இயேசுவை உங்கள் வாழ்வின் முதன்மையாக வைத்துப் பின்னர் நீங்கள் கொண்டுள்ள   கனவுகளெல்லாம் எப்படிப்பட்டதென்று சோதித்தறிய வேண்டும். உங்கள் கனவுகளிலும்,   லட்சியங்களிலும் இயேசுவே முதலிடத்தில் இருப்பாரென்றால் உங்கள் எதிர்காலம்   மகிமையினாலும், மகிழ்ச்சியினாலும் நிறைந்திருக்கும். 

ஏதேனும் ஒன்றை நீங்கள் விரும்புவதிலுள்ள உங்கள் நோக்கம்   தவறாக இருக்கிறது என்று தேவன் உங்களுக்கு உணர்த்துவாரானால், உடனடியாக அதனை விட்டுவிட நீங்கள் ஆயத்தமாக இருப்பதே உங்களது உடனடி மறுமொழியாக   இருக்கவேண்டும். மாறுவது சில நேரங்களில் கடினமாக இருக்கலாம்; ஆனால், தேவன் தன்   மனதில் உங்களுக்குச் சிறப்பானதையே கொண்டு நீங்கள் ஆவிக்குரிய ரீதியில் வளருவதை   விரும்புகிறார். 

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

தேவனுக்கே முதலிடம் கொடுங்கள்

நமது வாழ்வில் தேவனுக்கு முதலிடம் கொடுப்பது என்பது ஒரேயொருமுறை நடக்கும் செயல் அல்ல; அது, ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் வாழ்நாளெல்லாம் நடக்கும் தொடர்நிகழ்வு. நீங்கள் பலவருட அனுபவம் மிக்க கிறிஸ்தவரானாலும் சரி, புதிய விசுவாசியானாலும் சரி, வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வுக்கு பலனுள்ள வியூகமாக இருக்கிற இந்த வாசிப்புத்திட்டம், உங்களால் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், நடைமுறையில் பயிற்சிக்கக்கூடியதாகவும் இருக்கும். இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் ட்வென்டி 20 நம்பிக்கை, இன்க் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க:
http://www.twenty20faith.org/yvdev2/#googtrans(ta)