தேவன் நம்முடன் - அட்வெந்து கால வேதபாடத் திட்டம்மாதிரி

தேவன் நம்முடன் - அட்வெந்து கால வேதபாடத் திட்டம்

5 ல் 2 நாள்

மத்தேயுவின் நற்செய்தி

நம்மை நடத்திச் செல்ல தேவன் நம்முடன் இருக்கிறார்

அப்போஸ்தலனாகிய மத்தேயு எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இயேசுவின் பிறப்பு என்ற நிகழ்வுக்குநேராக நடத்திச் செல்லும் சம்பவங்கள் அனைத்துமே ஒரு விறுவிறுப்பாகச் செல்லும் நாவலைப் போலஇருக்கின்றது. இயேசுவின் இந்த உலகத்து வம்ச வரலாறு நம்பகத்தன்மை உடையது என்று நிரூபிப்பதற்காகஇயேசுவின் வம்ச வரலாறு கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் இயேசுவின் தகப்பனாகிய யோசேப்பு இயேசுவைத்தன் கருவில் சுமந்து கொண்டிருக்கும் அவரது தாயாராகிய மரியாளை திருமணம் செய்வதற்குத் தயங்கும் நிலைவிவரிக்கப்படுகிறது. அதன் பின்னர் வரும் வரலாற்றின் ஒவ்வொரு துளியிலும் தெய்வீக உந்துதல் இருக்கின்றது. தேவனது சித்தத்தின் மையத்தில் இருப்பதற்கு ஏற்ப மக்களை நடத்துவதாக இருக்கின்றது. ஒரு தேவ தூதன்யோசேப்பை மரியாளை திருமணம் செய்து கொள்ளும்படி வழி நடத்துகிறார். கிழக்குத் திசையிலிருந்து வந்திருந்தஞானிகள், இயேசு பிறந்திருந்த இடத்திற்கு ஒரு நட்சத்திரத்தினால் வழிநடத்தப்பட்டனர். அதே ஞானிகள், அந்தக்குழந்தைக்கு தீமை செய்ய திட்டமிட்டிருந்த ஏரோதுவிடம் திரும்பிச் செல்ல வேண்டாம் என்று  சொப்பனத்தில்எச்சரிக்கப்பட்டனர். ஏரோது சிறு ஆண் குழந்தைகள் மீது தனது முட்டாள்த்தனமான கொலை வெறியைஅவிழ்த்துவிட்டதால், மீண்டும் யோசேப்பு பெத்லஹேமை விட்டு  தப்பிச் சென்று, எகிப்தில் வாழும்படிவழிகாட்டப்பட்டார். பிரச்சனை ஓய்ந்ததும் யூதேயாவுக்குத் திரும்பி வந்து நாசரேத் ஊரில் குடியிருக்கும்படியோசேப்புக்கு சொப்பனத்தின் மூலம் வழிகாட்டப்பட்டது.

தங்கள் வாழ்விலும் தங்கள் வாழ்வின் மூலமாகவும் தேவனது திட்டங்கள் நிறைவேற வேஎண்டும் என்றுதங்களைத் திறந்து கொடுப்பவர்களாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருப்பவர்களை தேவன் தொடர்ந்துவழி நடத்திக் கொண்டே இருப்பதை நாம் காண்கிறோம்.  தேவன் நம்மோடு இருப்பது என்பது குழப்பம் அல்ல, தற்செயல் அல்ல ஆனால் தேவனது பங்கிற்கு திட்டமிடப்பட்ட, அறிவுப்பூர்வமான ஒரு தீர்மானம் ஆகும். நம்வாழ்வில் அவரை ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொள்ளும் போது நம்முடன், நமக்குள் வாழ்வதைஅவர் தேர்ந்தெடுக்கிறார். நம் வாழ்வை அவருக்கு என்று திருப்பிக் கொடுக்கும் தீர்மானமானது, நம் வாழ்வின் மீதுஅவருக்கு முழு ஆளுகையைக் கொடுப்பதாகும். நாம் அவர் அருகே உட்கார்ந்து பயணத்தை அனுபவித்துக்கொண்டிருக்க, அவர் ஓட்டுனர் இருக்கையை எடுத்துக் கொள்வது ஆகும். நாம் அவரை இப்படி ஓட்ட வேண்டும்என்று கட்டளையிட்டுக் கொண்டிருக்க முடியாது. நம் வாழ்வில் இயேசு முதல் நிலையான கட்டுப்பாட்டைவைத்திருத்தல் என்பது கண்ணை மூடிக் கொண்டு, யாரையோ முட்டாள்த்தனமாகப் பின்பற்றுவது அல்ல. அனைத்தையும் வேறு கண்ணோட்டத்தோடு பார்த்தல். நம்மை அவர் வழிநடத்துவதை உணர்தல். இதுவரைஇருந்தவற்றைவிட வித்தியாசமான புதிய, பழக்கமில்லாத உன்னதமான பாதைகளில் நடத்தப்படுவது ஆகும். நாம்அவரை அனுமதித்தால் நம் உறவுகளில், நம் வாழ்வில், பணிகளில், எதிர்கால திட்டங்களில், நம்தேர்ந்தெடுப்புகளில், நமது ஏக்கங்களில், நம் படிப்புகளில் அவர் நம்மை நடத்துகிறார். நம்மை அணுக விட்டால்அவர் நம்மை வழிநடத்த முடியும். அவர் செயல்பட இடம் கொடுத்தால் அவர் நம்மை நடத்த முடியும். நாம்தாழ்மையாக, கீழ்ப்படிந்து, ஆர்வத்துடன் இருப்பதைக் கண்டால் அவர் மகிழ்ச்சியுடன் நம்மை வழிநடத்துவார். உங்களை வழி நடத்த நீங்கள் எவ்வளவு ஆயத்தமாக இருக்கிறீர்கள்?

மோசே மற்றும் யோசுவாவின் காலத்தில், தேவன் தன் மக்களிடம் தான் உடன் இருப்பதால் அவர்கள் பயப்படவேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார். மேகஸ்தம்பத்தால் பகலிலும் அக்கினிஸ்தம்பத்தால் இரவிலும் அவர்கள் வழிநடத்தினார் தேவன். யுத்தங்களில் அவரே வழிநடத்தி அவர்களுக்காகயுத்தம் செய்தார். தாவீது அரசனும் மற்ற சங்கீதக்காரர்களும் தங்களது ஆத்துமாவின் ஒவ்வொரு பருவத்திலும்உடன் இருந்த தேவனது தொடர்ச்சியான பிரசன்னத்தைப் பற்றி சங்கீதங்கள் எழுதினார்கள்.  பிதாவாகியதேவனை ஒரு நல்ல மேய்ப்பனாக இயேசு ஒப்பிட்டார். அவர் ஒவ்வொரு ஆட்டையும் பெயர் சொல்லிஅறிந்திருப்பவர் அவர். பாதுகாப்பான மேய்ச்சல் நிலத்துக்கு அவைகளை மென்மையாக நடத்திச் செல்பவர்அவர். இந்த தேவன் தான் நாம் வணங்குபவர் என்றால், நம் வாழ்வில் ஈடுபாடு காட்டுகிறவர் அவர் என்றால், நாம்ஏன் கடினமான தீர்மானங்களைப் பற்றி  கவலையுடன் இருக்கிறோம்?  அடுத்து என்ன என்று ஏன் நாம்தூக்கமில்லாமல் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்? தேவன் நம்முடன் இருக்கிறார் என்னும்இம்மானுவேலை நாம் ஏன் உண்மையாக நம்ப முடியாது?  அவர் உண்மையில் நம்முடன் இருக்கிறார், வழிநடத்துகிறார், அவருடைய உண்மையும் நீதியுமான பாதையில் அவருடைய பெயரின் காரணமாக நடத்துவார்என்பதை ஏன் ஏற்க முடியவில்லை? நம்முடன் எப்போது இருப்பதாக அவர் தரும் உறுதி நம்மில் அசைக்கமுடியாத நம்பிக்கையை உருவாக்க முடியுமா? நம் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ப சரியான நேரத்தில்வழி நடத்துவார் என்ற நம்பிக்கை இந்த உறுதியான நம்பிக்கையை நமக்குத் தர முடியும்.

ஜெபம்:

அன்பின் ஆண்டவரே,

நான் நடக்க வேண்டிய வழியில் என்னை நடத்தும்படியாக நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். என் வாழ்வின்அனைத்துப் பகுதிகளையும் உம் ஆளுகைக்குள் கொடுக்கிறேன். எல்லா வழிகளிலும் நீரே என்னை நடத்தும்படிகேட்டுக் கொள்கிறேன். நீர் என்னுடன் இருப்பதால் இந்தப் பயணத்தில் எனக்கு மகிழ்ச்சியையும் உறுதியானநம்பிக்கையையும் தாரும்.  

இயேசுவின் பெயரால்,

ஆமென்.

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

தேவன் நம்முடன் - அட்வெந்து கால வேதபாடத் திட்டம்

சிறந்த காலங்களில் நம் உலகமானது உறுதி இல்லாத, தலைகீழானதாகத் தோன்றுகிறது. தேவ குமாரனாகிய இயேசு மட்டும் இல்லை என்றால், நமக்கு நம்பிக்கையே இருந்திருக்காது. ஒவ்வொரு கிறிஸ்து பிறப்புத் திருநாளும் - இம்மானுவேல் - தேவன் நம்முடன், என்னும் பரிசை நமக்கு நினைவுபடுத்துகிறது. நம்முடன் தேவன் இருக்கிறார் என்ற பரிசு தான் நமக்குத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இப்போதில் இருந்து நித்திய காலம் வரை, நாம் ஒரு போதும் தனிமையாக இல்லை. இது கொண்டாடுவதற்கு ஏற்ற காரணம் தான்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக நாங்கள் ஆர் சியோனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://www.wearezion.in