தேவன் நம்முடன் - அட்வெந்து கால வேதபாடத் திட்டம்மாதிரி

தேவன் நம்முடன் - அட்வெந்து கால வேதபாடத் திட்டம்

5 ல் 3 நாள்

மாற்குவின் நற்செய்தி 

நம்மை நேசிக்க தேவன் நம்முடன் இருக்கிறார்

அன்பு என்பது ஆங்கில மொழியில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட சொல்லாக இருக்கின்றது. உங்களுக்குநம்பிக்கை இல்லை என்றால் உங்களது கூகுள் செயலியில் Love என்று தட்டச்சிப் பாருங்கள். அதில் வரும்அனேகமான பதிகளைப் பாருங்கள்.  சத்தத்தால் இயக்கப்படும் கைபேசி உதவியாளர்களிடம் அடிக்கடிகேட்கப்படும் கேள்வியானது “நீ என்னை அன்பு செய்கின்றாயா?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகமே இல்லாமல் இது உதவிக்கான கூக்குரல் தான். 

இயேசு உலகத்துக்கு வந்த போது அவரது நோக்கமானது மனிதர்கள் மீது அவர் வைத்திருந்த அன்பைவெளிப்படுத்துவதாகத் தான் இருந்தது. அவர் எப்போதுமே தனது மக்களை நேசித்தார். ஆனால் எப்படியோஅவரது மக்களால் அவர் மீது மட்டுமே தங்கள் கவனத்தை வைக்க முடியவில்லை. அதன் விளைவாக, அவர்கள்தொடர்ந்து வழி தவறிக் கொண்டே இருந்தார்கள். இந்த அன்பின் தேவனை விட்டுவிட்டு, அவரது நீதியுள்ளகோபத்துக்கும் தண்டனைக்கும் தங்களை ஆளாக்கிக் கொண்டனர்.  தேவனோ தனது மாபெரும் அன்பினால்அவர்களை என்றென்றும் கைவிட்டுவிடாமல், அக்கறை இல்லாமல் தன் கைகளைக் கழுவிவிடாமல் மீண்டும்அவர்களை மன்னித்து தம்மிடமாக அவர்களைச் சேர்த்துக் கொண்டார். இது எத்தனை மாபெரும் அன்பு? 

அது மிகவும் ஆழமானது, புரிந்து கொள்ள முடியாதது, மிகவும் தாராளமானது, ஒப்பில்லாதது. இந்த அன்பு தான்அவரது ஒரே மகனை இந்த உலகத்துக்கு அனுப்பி நம்மைப் போல மாறச் செய்தது. நாம் தேவனை முற்றிலும்புதிய நிலையில் அனுபவிக்க இது நமக்கு உதவுகிறது. நமக்கு இது என்ன அர்த்தத்தைத் தருகிறது? விதிவிலக்குஇல்லாமல் நாம் ஒவ்வொருவருமே அன்பு செய்யப்பட வேண்டும் என்று ஏங்குகிறோம். நற்செய்தி சொல்லும்மாபெரும் செய்தி என்னவென்றால் இந்த உலகத்தில் இருக்கும் ஒரே நபர் நீங்கள் தான் என்று சொல்லும்அளவுக்கு தேவன் உங்களை நேசிக்கிறார். குழப்பம், பாரங்கள், வரலாறு எல்லாம் உட்பட  - நீங்கள்இருக்கிறபடியே அவர் உங்களை நேசிக்கிறார்.  நீங்கள் அவருடன் இருக்கும் போது உங்களுக்கு எந்தவிதமானஒப்பனைகளோ, மாற்றங்களோ தேவையில்லை. நீங்கள் தனிமையாக இருக்கக் கூடாது, மறக்கப்பட்டதாகநினைக்கக் கூடாது என்பதற்காகத் தன் மகனையே இந்த உலகத்துக்கு அனுப்பியவர் அவர். தனதுஆள்த்தன்மையின் ஒவ்வொரு அணுவிலும் அவர் உங்களை நேசிக்கிறார். நீங்கள் என்ன செய்கிறீர்கள் அல்லதுஎப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் அவர் உங்களை நேசிப்பதில்லை. இது உங்களுக்கு ஒருநிம்மதியைத் தருகிறது அல்லவா? நாம் வாழ்கின்ற உடைந்து போன உலகமானது அன்பை மிகவும் திருக்கிமுறுக்கி வைத்திருக்கிறது. ஆகவே நம்மால் தேவனது அன்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. சிலநேரங்களில் நாம் அதை சந்தேகத்துடனும் எதிர்மறையாகவும் பார்க்கின்றோம். உண்மை என்னவென்றால் - நாம்பாவிகளாக இருக்கையிலேயே அவர் நமக்காகத் தன் உயிரைத் தரும் அளவுக்கு கிறிஸ்து நம்மை நேசிக்கிறார். அத்துடன் அவர் நிறுத்திவிடவில்லை. நம்மை அவர் தனது குடும்பத்தில் தத்து எடுத்துக் கொள்கிறார். ஆகவே நாம்இனி தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறோம். எத்தனை மரியாதை இது! நாம்தனிமையானவர்கள் என்றோ, விரும்பப்படாதவர்கள் என்றோ, இயலாதவர்கள் என்றோ, மதிப்பில்லாதவர்கள்என்றோ, உடைந்தவர்கள் என்றோ, குழப்பமானவர்களோ என்று இனி முத்திரை குத்தப்பட வேண்டியதில்லை. இப்போது நீங்கள் தேவனது பிள்ளை என்று அழைக்கப்படுகிறீர்கள்.

இந்த உண்மை உங்களுக்குள் இறங்குவதற்கு சிறிது நேரம் கொடுங்கள்.

இந்த தலைப்பு உங்களுக்குள் ஆழமாகப் பதியும் வரை அதை உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.

சமூக விலகல் மற்றும் தனிமை என்னும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால், நாம் நேசிக்கப்படாதவர்கள்என்றோ, தனிமையாக இருப்பவர்களாகவோ, கைவிடப்பட்டவர்களாகவோ உணர வேண்டியதில்லை. நாம்நேசிக்கப்படுகிறோம். தேவனால் அறியப்பட்டு, மதிக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு மத்தியில் இருக்கும்இயேசுவுக்கு நன்றி. கிறிஸ்துவின் வாழ்வு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மனிதர்களுக்கும் தேவனுக்கும்இடையிலிருந்த பெரும் இடைவெளியை ஒரேயடியாக இணைத்துவிட்டது. ஆகவே நான் இனிமேல் தேவனிடம்இருந்து தூரமானவர்களாக இருக்க வேண்டியதில்லை. நாம் எந்த அளவுக்கு அன்பு செய்யப்படுகிறோம் என்பதைநாம் சந்தேகப்படாமல் இருப்போம்.

ஜெபம்:

அன்பின் ஆண்டவரே,

என் மீது நீர் வைத்திருக்கும் பெரும் அன்புக்காக உமக்கு நன்றி.  அதன் ஆழத்தையோ உயரத்தையோ என்னால்புரிந்து கொள்ளவே முடியாது. ஆனால் அது உண்மை என்றும் வல்லமையுள்ளது என்பதையும் நான்அறிந்திருக்கிறேன். உம் அன்புக்கு என்னை அர்ப்பணிக்கிறேன். அது என் உறுதியில்லாத தன்மைகளையும்பயங்களையும் அகற்றி சமாதானத்துடனும் பாதுகாப்புடனும் வாழ உதவி செய்யட்டும். நான் உம் பிள்ளையாகஇருப்பதால் உம்மை எனது தகப்பனாக ஏற்றுக் கொள்கிறேன்.

இயேசுவின் பெயரால்,

ஆமென்.

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

தேவன் நம்முடன் - அட்வெந்து கால வேதபாடத் திட்டம்

சிறந்த காலங்களில் நம் உலகமானது உறுதி இல்லாத, தலைகீழானதாகத் தோன்றுகிறது. தேவ குமாரனாகிய இயேசு மட்டும் இல்லை என்றால், நமக்கு நம்பிக்கையே இருந்திருக்காது. ஒவ்வொரு கிறிஸ்து பிறப்புத் திருநாளும் - இம்மானுவேல் - தேவன் நம்முடன், என்னும் பரிசை நமக்கு நினைவுபடுத்துகிறது. நம்முடன் தேவன் இருக்கிறார் என்ற பரிசு தான் நமக்குத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இப்போதில் இருந்து நித்திய காலம் வரை, நாம் ஒரு போதும் தனிமையாக இல்லை. இது கொண்டாடுவதற்கு ஏற்ற காரணம் தான்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக நாங்கள் ஆர் சியோனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://www.wearezion.in