தேவன் நம்முடன் - அட்வெந்து கால வேதபாடத் திட்டம்மாதிரி

தேவன் நம்முடன் - அட்வெந்து கால வேதபாடத் திட்டம்

5 ல் 5 நாள்

யோவானின் நற்செய்தி

நமக்கு வாழ்வைத் தருவதற்காக தேவன் நம்மோடு இருக்கிறார்

யோவான் எழுதிய நற்செய்தி நூலானது இயேசு யார் என்பதைப் பற்றிய ஒரு கவிதையுடன் துவங்குகிறது. தனதுதனிமையான முறையில் இந்த அப்போஸ்தலன் இயேசுவே தேவன் என்று அறிக்கையிடுகிறார். அவர்மூலமாகவே அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் கொடுக்கப்பட்டது என்கிறார். அவரில் உயிர் இருந்ததுஎன்றும், அந்த உயிரும் வெளிச்சமும் அனைத்து மனிதர்களுக்கும் உயிராக இருந்தது என்கிறார் அவர் (John1:4). இயேசு யார் என்பதை விளக்க ஒளி என்னும் சொல்லைத் தனது நிருபத்தில் பயன்படுத்துகிறார். அவருடன்இணைந்திருக்கிறோம் என்று சொல்லியும் இருளில் இருந்தோம் என்றால் நாம் உண்மையில் வாழவில்லைஎன்கிறார்(1 யோவான் 1:6). ஆகவே இயேசு வெளிச்சத்தைக் கொண்டு வருபவரும், உயிரைத் தருபவருமாகஇருக்கிறார்.

இந்த உலகத்தில் நமது வாழ்வில் தேவையான அனைத்தையும் தன்னிடத்தில் கொண்டிருக்கும் ஒன்று தான்வெளிச்சம் ஆகும். தாவரங்களுக்கு உணவை உருவாக்கும் ஒளிச்சேர்க்கை என்ற நிகழ்வுக்கு சூரிய ஒளிதேவையாக இருக்கின்றது. அந்த உணவைத் தான் நாம் உண்கிறோம். அதே  ஒளிச்சேர்க்கை தான் மனிதர்களுக்குஅதிகம் தேவையான உயிர்க் காற்றான ஆக்சிஜன் உருவாகவும் தேவையானதாக இருக்கின்றது. ஒளிஇல்லையென்றால் இந்த உலகமானது இருளாகவும் உயிர் இல்லாத ஒரு இடமாக இருக்கும். ஒளியும் உயிரும்இந்த இயற்கை உலகத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்தே செல்கின்றன. அப்படியானால் ஆன்மீக உலகத்தில்இது எத்தனை உண்மையாக இருக்கும்? இருளான உலகத்தில் இயேசு ஒளியைக் கொண்டு வந்தார். லட்சக்கணக்கான நபர்களின் வாழ்வுகளை மாற்றினார். அவர் நமக்குள் உயிரை ஊதியது மட்டுமல்லஇயேசுவுக்குள் நாம் மறுபடியும் பிறந்த போது அவர் நமக்குள் ஒரு புதிய உயிரைக் கொண்டுவந்தார். மக்களின்இதயங்களை மாற்றவே அவர் வந்தார். மனங்களை புதுப்பித்து, வாழ்க்கைகளை மறுமலர்ச்சி அடையச் செய்யவந்தார். நம்முடன் தேவன் இருப்பது என்பது நம் வாழ்வை அவரை அறியாத காலத்தில் இருந்ததை விடவித்தியாசமானதாக மாறச் செய்யும்.

பலகாரத்தின் அருமை அதை மக்கள் சாப்பிடுவதில் தான் தெரியும் என்ற ஒரு பழமொழியைக் கேட்டிருப்போம். அதைப் போலவே, தேவன் எப்போதுமே நம்மோடு இருக்கிறார் என்பதின் ஆதாரமானது  நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கும் உலகத்துக்கு நாம் எப்படித் தெரிகிறோம் என்பதில் இருக்கின்றது. நம்மில் கிறிஸ்து வாழ்கிறார்என்றால் நாம் அவரில் வாழ்கிறோம் என்றால், அவர் யார் என்பதையும் அவர் எப்படிப்பட்டவர் என்பதையும் நம்வாழ்க்கை வெளிக்காட்ட வேண்டும் அல்லவா? யோவான் 10 ஆம் அதிகாரம் 10 ஆம் வசனத்தில் பிசாசாகியஎதிரியானவன் எப்படி திருடவும், கொல்லவும் அழிக்கவும் வருகிறான் என்றும், தான் பரிபூரணமான வாழ்வைத்தர வந்திருக்கிறார் என்றும் இயேசு சொல்கிறார். இந்த பரிபூரண வாழ்க்கையானது நம் வாழ்வில் தேவன்இருக்கிறார் நம் வாழ்வில் ஈடுபட்டிருக்கிறார் என்பதன் அடையாளமாக இருக்கின்றது.  செல்வங்கள், வெற்றிகள், பாதிப்பு போன்றவை இருப்பது தான் பரிபூரண வாழ்வு என்று அவசியம் இல்லை. குழப்பங்களில் நடுவேசமாதானத்தையும், தோல்விகளின் நடுவே மகிழ்ச்சியையும், வேதனையின் நடுவில் நோக்கத்தையும் கண்டுகொள்வதாகும். இந்த வாழ்வில் கிறிஸ்துவின் நறுமணத்தை நாம் பெற்றிருப்போம். ஆகவே நம்மை சந்திக்கும்ஒவ்வொருவரும் முதலில் அவரையே நம்மில் காண்பார்கள். இந்த வாழ்க்கையானது கேள்விகளை எழுப்பி, விசுவாசத்தில் கட்டி எழுப்பப்பட்ட வாழ்வைப் பற்றிய ஆழமான உரையாடல்களுக்கு நம்மைத் திறந்துவிடும்.  நம்வாழ்நாட்களையும் தாண்டிய ஒரு நோக்கத்தைப் பெற்றதாக இருக்கும். வரப் போகும் பல தலைமுறைகளைப்பாதிப்பதாக இருக்கும்.

கிறிஸ்து நமக்கு யாராக இருக்கிறார் என்பதை நமது சமூக வலைத்தள பதிவுகளை விட நம் வாழ்க்கை அதிகசத்தமாகப் பேசுவதாக.  உண்மை என்று நமது கலாச்சாரம் சொல்பவற்றைவிட சத்தமாக நம் வாழ்க்கைகள்பேசட்டும். நம் தலைமுறையைக் குழப்ப எதிரியானவன் பயன்படுத்தும் பொய்களைவிட நம் வாழ்வுகள் உரத்துப்பேசுவதாக. நம் வாழ்க்கைகளே சிலர் வாசிக்கும் வேதாகமமாக இருக்கக் கூடும். ஆகவே, நான் என்னசெய்தாலும், வாழ்வில் நாம் இப்போது எங்கே இருந்தாலும் அதையும் தாண்டி நாம் எப்படி வாழ்கிறோம் என்பதுமிகவும் முக்கியமானது ஆகும். 

இந்த கிறிஸ்மஸ் காலத்தில் புதிய வாழ்வை நம்மில் ஊதும்படியாக தேவனிடம் கேட்போம். புதிய ஆண்டில் நாம்புத்துணர்ச்சியுடன் மறுபடியும் கட்டி எழுப்பப்பட்டவர்களாக புதிய இடங்களை வெற்றி கொள்வோமாக. புதியஇடங்களை சுதந்தரிப்போமாக. ராட்சதர்களை வெற்றி பெறுவோமாக. ஒரு நிமிட நேரமாக இருந்தாலும் கூடநம்மை சந்திக்கும் ஒவ்வொருவர் மீதும் கிறிஸ்துவின் நறுமணத்தை வீசுவோமாக.  

ஜெபம்: 

அன்பின் ஆண்டவரே,

எங்களுடன் இருப்பதற்காக இயேசுவை அனுப்பியதற்காக உமக்கு நன்றி. புதிய விசுவாசத்தை எனக்குள்செலுத்திக் கொண்டிருக்கும், உம்மை நோக்கி என்னை வழி நடத்திக் கொண்டிருக்கும் பரிசுத்தஆவியானவருக்காக உமக்கு நன்றி. என்னில் இருக்கும் சுயநலம், பெருமை போன்றவற்றை மன்னியும். உமக்காகவும் உமது புகழுக்காகவுமே நான் எப்போதுமே வாழ எனக்கு உதவி செய்யும்படியாக ஜெபிக்கிறேன்.

இயேசுவின் பெயரால்,

ஆமென்.

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

தேவன் நம்முடன் - அட்வெந்து கால வேதபாடத் திட்டம்

சிறந்த காலங்களில் நம் உலகமானது உறுதி இல்லாத, தலைகீழானதாகத் தோன்றுகிறது. தேவ குமாரனாகிய இயேசு மட்டும் இல்லை என்றால், நமக்கு நம்பிக்கையே இருந்திருக்காது. ஒவ்வொரு கிறிஸ்து பிறப்புத் திருநாளும் - இம்மானுவேல் - தேவன் நம்முடன், என்னும் பரிசை நமக்கு நினைவுபடுத்துகிறது. நம்முடன் தேவன் இருக்கிறார் என்ற பரிசு தான் நமக்குத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இப்போதில் இருந்து நித்திய காலம் வரை, நாம் ஒரு போதும் தனிமையாக இல்லை. இது கொண்டாடுவதற்கு ஏற்ற காரணம் தான்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக நாங்கள் ஆர் சியோனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://www.wearezion.in