உண்மை ஆன்மீகம்மாதிரி

உண்மை ஆன்மீகம்

7 ல் 3 நாள்

கர்த்தரிடம் இருந்து சிறப்பானதைப் பெறுதல்

மிகவும் சிறப்பானதையே நமக்குத் தரவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். எளியதையோ, மிகவும் ஆடம்பரமானதையோ அல்ல, - அவர் விளக்கம் கொடுக்கிறது போலவே, மிகச் சிறப்பானதையே  உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறார். அவரது சித்தமானது அவரது சித்தமானது “நன்மையும் பிரியமும்பரிபூரணமுமானது” என்பதை நினைவில் வைத்திருங்கள்.

ஆனால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கர்த்தரின் சிறப்பானதை அனுபவிக்காமல் இருக்கிறார்கள். ஏன்? 

ஒரு காரணம் பொய் ஆகும்: வாழ்க்கையின் அர்த்தம் மற்றும் நமக்கானகர்த்தரின் நோக்கம் என்ன என்பதைப் பற்றிய பொய்கள். பொய்கள் நம்மைஇந்த உலகத்தின் வழிகளுடன் ஒத்துப் போகும்படி செய்கின்றன. உலகம்பார்ப்பது போல உலகத்தைப் பார்த்தல் என்பது நாம் கர்த்தரை அறிந்து கொள்வதையும், அவரது கட்டளைகளைப் புரிந்து கொள்வதையும் தடுக்கின்றன. கர்த்தர் நமக்குக் கொடுக்க விரும்புகின்ற அற்புதமானவற்றை நாம் இழந்து போய்விடுகிறோம்.  

இந்த பொய்கள் எங்கிருந்து வருகின்றன? 

·  நம் வாழ்வில் கர்த்தரின் நோக்கங்களை நிறைவேற்றவிடாமல் எதிர்க்கும் ஒரு ஆன்மீக எதிரி நமக்கு இருக்கிறான். 

·  கர்த்தரின் நோக்கங்களைக் குலைத்துவிடும் ஒரு விழுந்து போன உலகத்தில் நாம் வாழ்கிறோம். 

·  நம் ஒவ்வொருவருக்குமே பழைய, பாவ சுபாவம் என்னும் ஒரு நீண்ட வரலாறு இருக்கின்றது.  

இந்த மூன்று சக்திகளும் இணைந்து நம்மைப் பழைய வழக்கத்திலேயே சுற்றிக்கொண்டிருக்க வைக்கின்றன. இதனால் தான் அப்போஸ்தலனாகிய பவுல் இந்தஉலகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்கக் கூடாது என்கிறார். நம் வாழ்வு மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாக வேண்டும் என்கிறார்.  

நாம் செய்ய வேண்டியவைகள்: 

·  உலகத்தின் சிந்தனைகளால் நம்மை நிரப்புவதை நிறுத்த வேண்டும்.  

·  நம் மனங்களைக் கர்த்தரின் வழிகளால் நிரப்ப வேண்டும்.  

நம் மீது கர்த்தர் வைதிருக்கும் அன்பில் நம்பிக்கை வைத்து அந்த நம்பிக்கையின் மீது கட்டப்பட்டிருக்கும் ஒரு உண்மை ஆன்மீக உணவு நமக்குத் தேவை. அப்படி இருந்தால் மட்டுமே நம் வாழ்க்கைகள் மாற்றமடையத் துவங்கும். அதன் பின்னர் தான் நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான கர்த்தரின் சித்தத்தையும் உண்மை ஆன்மீகத்தையும் அனுபவிக்க முடியும். 

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

உண்மை ஆன்மீகம்

உண்மை கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி இருக்கும்? வேதத்தின் ஆற்றலுள்ள பகுதியாகிய ரோமர் 12ஆம் அதிகாரம் நமக்கு ஒரு படத்தைக் கொடுக்கின்றது. இந்த வாசிப்புத் திட்டத்தில், நம் சிந்தனைகள், நம்மைப் பற்றிய நம் பார்வை, பிறருடன் உள்ள உறவுகள், தீமையுடனான போராட்டம் ஆகிய வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் கர்த்தர் மாற்றும் போது உண்மை ஆன்மீகத்தைப் பற்றி கற்றுக் கொள்வீர்கள். கர்த்தரிடமிருந்து சிறந்தவைகளைப் பெற்று உலகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: https://livingontheedge.org/