உண்மை ஆன்மீகம்மாதிரி
உண்மையான உங்களைப் பிடித்துக் கொள்ளுதல்
நீங்கள் யார்? இது ஒரு சிக்கலான கேள்வி அல்லவா? ஒரு வகையில், உங்களது சுயம் என்ற கருத்தானது உங்கள் குடும்பத்தின் பின்னணி, உங்களது ஆள்த்தன்மை, உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கும் நம்பிக்கைகள், உங்கள் வாழ்வில் இருக்கும் முக்கியமான நபர்கள் போன்றவற்றில் தான் ஆழமாகப் பதிந்திருக்கிறது.
வேறுவகையில், நீங்கள் யார் என்று நினைத்திருக்கிறீர்களோ அந்த நபராகவே நீங்கள் இல்லாமல் இருக்கலாம்.
கர்த்தரே உங்களது உண்மையான அடையாளத்தை உருவாக்குகிறவர்.உங்களை எவ்வாறு வடிவமைத்திருக்கிறார் என்பதை அவரே அறிவார்.உங்களை அழைத்த அழைப்பை நிறைவேற்றுவதற்காக உங்களுக்குக் கொடுத்த ஈவுகள் என்ன என்பதை அவரே அறிந்திருக்கிறார்.
ஆகவே தான் பவுல் ரோம சபையினரிடம் அவர்கள் தங்களைப் பற்றிய சரியான சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்:
உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய்எண்ணவேண்டும். (ரோமர் 12:3)
உங்களைப் பற்றிய கர்த்தரின் கண்ணோட்டம் என்ன என்பதை நீங்கள் கற்றுக்கொள்ளும் போது - நீங்கள் உண்மையிலேயே யார் என்பதை அறியும் போது - அனைத்துமே மாற்றமடையத் துவங்குகின்றன, உண்மையான ஆன்மீக வாழ்வை வாழுதல் சாத்தியமாகிறது.
கர்த்தர் உங்கள் மனதை மறுரூபமாக்க அனுமதிக்கும் போது, உங்கள்மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் உலகத்தின் சிந்தனைகளும் மாற்றம்பெறுகின்றன. அதாவது உங்களைப் பற்றியே நீங்கள் கொண்டிருக்கும் தாழ்வுமனப்பான்மையோ, பெருமையோ, பிறருடன் உங்களை அடையாளப்படுத்தும்நிலை, உங்கள் சிந்தனை உலகம், கனவுகள், நோக்கங்கள், இலக்குகள் அனைத்துமே மாற்றமடைகின்றன.
இந்தப் பகுதியில் பவுல் குறிப்பிடுவது போல நீங்கள் விசுவாசிகளின்ஐக்கியத்தில் உங்களை எப்படி பொருத்திக் கொள்வீர்கள் என்பதைப் பற்றியும் இது விளக்குகிறது.
உண்மை ஆன்மீகம் என்பது கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையில் ஒருஉறுப்பினராக வாழ்வது ஆகும். நீங்கள் யார் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், நீங்கள் உங்களைக் கர்த்தர் வடிவமைத்திருப்பது போலவே, அன்பைக் கொடுக்கவும் பெற்றுக் கொள்ளவும் அறிந்து கொள்வீர்கள். விசுவாசிகளின்ஐக்கியத்தில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை அறிந்திருப்பீர்கள். அத்துடன் உங்களுக்கு இருக்கும் வரங்களை சிறப்பாகப் பயன்படுத்துவீர்கள். மறுரூபமடைந்து, ஜீவ பலியாக வாழ்ந்து முழுமையாகக் கர்த்தரின் நோக்கங்களை நடைமுறைப்படுத்தும் அழைப்பை நிறைவேற்றுவீர்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உண்மை கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி இருக்கும்? வேதத்தின் ஆற்றலுள்ள பகுதியாகிய ரோமர் 12ஆம் அதிகாரம் நமக்கு ஒரு படத்தைக் கொடுக்கின்றது. இந்த வாசிப்புத் திட்டத்தில், நம் சிந்தனைகள், நம்மைப் பற்றிய நம் பார்வை, பிறருடன் உள்ள உறவுகள், தீமையுடனான போராட்டம் ஆகிய வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் கர்த்தர் மாற்றும் போது உண்மை ஆன்மீகத்தைப் பற்றி கற்றுக் கொள்வீர்கள். கர்த்தரிடமிருந்து சிறந்தவைகளைப் பெற்று உலகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.
More
இந்த திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: https://livingontheedge.org/