உண்மை ஆன்மீகம்மாதிரி
அதிகாரப்பூர்வமான ஐக்கியத்தை அனுபவித்தல்
இயேசு சிலுவையில் அடிக்கப்படுவதற்கு முந்தின இரவைப் பற்றி நினைவில் இருக்கின்றதா? தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு இயேசு ஒரு புதிய கட்டளையைக் கொடுத்தார் - அவர்கள் ஒருவரை ஒருவர் புரட்சிகரமாக நேசிக்க வேண்டும் என்பதுவே அந்த கட்டளையாகும்.
இயேசு தனது பிதாவாகிய தேவனுடன் கொண்டிருந்த அன்பு மற்றும்ஐக்கியத்தை அவரைப் பின்பற்றுகிறவர்களும் அனுபவிக்க வேண்டும் என்று இயேசு ஜெபித்தார் (யோவான் 13:34; 17:20-24). இந்த அன்பானது அதைக்கொடுப்பவரின் இதயத்தில் இருந்தே வருகின்றது. இது பெற்றுக் கொள்பவரின் தகுதிகளை சார்ந்தது அல்ல.
இந்த அழைப்பை பவுல் எதிரொலிக்கிறார் ரோமர் 12:10:
“சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்.”
இன்றைய வாசிப்பில், பவுல் விசுவாசிகளின் உண்மையான ஐக்கியத்தைப் பற்றி விவரிக்கின்றார். இவர்கள் ஒருவரை ஒருவர் உண்மையாக நேசிக்கின்றவர்கள். நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர் சொல்கிறார்:
· ஒருவரை ஒருவர் தங்களிலும் மேலாக மதிக்க வேண்டும்.
· வாஞ்சையுடன் கர்த்தரை சேவிக்க வேண்டும்.
· நம்பிக்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
· பாடுகளில் பொறுமையாக இருக்க வேண்டும்.
· ஜெபத்தில் உண்மைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.
· தேவையில் இருக்கும் கர்த்தரின் மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
· விருந்தோம்பலை பின்பற்ற வேண்டும்.
இப்படிப்பட்ட ஆன்மீக ஐக்கியம் என்பது அரியதாக இருக்கலாம் (இந்தநாட்களில் இப்படிப்பட்ட ஐக்கியங்களைக் காண்பது மிகவும்கடினமாகிவருகின்றது). ஆனால் இப்படிப்பட்ட ஐக்கியங்களை உருவாக்க முயற்சிகளைச் செய்யும் போது, அது வாழ்க்கையையே மாற்றுகின்றவைகளாக இருக்கும்.
ஒருவர் வாழ்வில் ஒருவர் பங்கேற்கும் போது, நாம் வாழ்வின் மிகவும் வேதனையான சோதனைகளையும் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள முடியும். கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையையும் அவரது வாக்குத்தத்தங்களையும் பற்றிக் கொண்டு இதை நாம் நிறைவேற்ற முடியும். நாம் ஒவ்வொருவருடனும்கர்த்தருடனும் ஒற்றுமையில் வளருவோம்.
மற்ற விசுவாசிகளை நேசிக்கவும் அவர்களுக்கு தியாகத்துடன் சேவை செய்யவும்கூடிய அதிகாரப்பூர்வமான ஐக்கியத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுக்க விருப்பத்துடன் இருக்கின்றீர்களா? கர்த்தர் உதவி செய்வார். தனது அன்பை நாம் மற்ற விசுவாசிகளுடன் வெளிப்படுத்தி, உங்கள் வாழ்வில் அவர் வைத்திருக்கும் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உண்மை கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி இருக்கும்? வேதத்தின் ஆற்றலுள்ள பகுதியாகிய ரோமர் 12ஆம் அதிகாரம் நமக்கு ஒரு படத்தைக் கொடுக்கின்றது. இந்த வாசிப்புத் திட்டத்தில், நம் சிந்தனைகள், நம்மைப் பற்றிய நம் பார்வை, பிறருடன் உள்ள உறவுகள், தீமையுடனான போராட்டம் ஆகிய வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் கர்த்தர் மாற்றும் போது உண்மை ஆன்மீகத்தைப் பற்றி கற்றுக் கொள்வீர்கள். கர்த்தரிடமிருந்து சிறந்தவைகளைப் பெற்று உலகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.
More
இந்த திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: https://livingontheedge.org/