தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 69 நாள்

ஹெல்மெட்

ஒரு கிராமப் பகுதியில் புதிய சாலை ஒன்றை அமைத்துக் கொண்டிருந்தனர் தொழிலாளர்கள். சாலை வரவேண்டிய இடத்தில் இருந்த மரங்களை எல்லாம் வெட்டிக் கொண்டிருந்த போது ஒரு மரத்தில் குருவியின் கூடு ஒன்றைக் கண்டார்கள். அதில் இன்னும் பறக்க முடியாத நிலையில் குஞ்சுகள் இருந்ததைக் கண்டார் ஒரு அதிகாரி. அந்த மரத்தை இப்போதைக்கு வெட்ட வேண்டாம் என்று சொல்லி அதில் குறியிட்டார். சில வாரங்களுக்குப் பின் அந்த அதிகாரி அதே மரத்திலுள்ள கூட்டை எட்டிப் பார்த்தார். அதிலிருந்து குஞ்சுகள் பறந்து சென்றிருந்ததைக் கண்டபின் அந்த மரத்தை வெட்டலாம் என்று சொல்லிவிட்டார். அந்த மரம் விழுந்த பின் கூட்டின் உள்ளே சில தாள்களும் இருந்தன. அதில் ஞாயிறு பள்ளியில் கொடுக்கப்பட்ட ஒரு புத்தகத்தின் பக்கம் ஒன்று சிறு துண்டாக இருந்தது. அவர் உன்னைக் காக்கிறவர் என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன.

தாவீது ராஜாவின் பல போர்களில் அவர் பாதுகாக்கப்பட்டார். அவரும் வயதாகித் தான் தன் மரணத்தையும் கண்டார். கோலியாத் என்னும் அரக்கன் முதலாக, மிகப் பலம் வாய்ந்த அரசர்களிடம் அவர் மோதியிருக்கின்றார். அதிக ஆயுதங்கள் இல்லாத சூழலிலும், காட்டுக்குள் சிறிய படையை வைத்துக் கொண்டும், அன்னிய நாட்டில் இருந்து கொண்டும் அவர் போரிட்ட பல மோசமான சூழல்களிலும் அவர் பாதுகாக்கப்பட்டார். அதனால் தான் ஆண்டவர் அவரைக் காப்பாற்றியதாகச் சொல்கிறார்.

நமது வாழ்விலும் பல ஆபத்துக்கள் நமது உடலுக்கும் ஆத்துமாவுக்கும் வரலாம். ஆண்டவரின் பிரசன்னம் நமக்குப் பாதுகாப்பையும், ஆபத்துகளிலிருந்து விடுதலையையும் தரலாம். 

சிந்தனை : கடவுளுக்குத் தலை வணங்கினால், இரட்சண்யம் என்னும் தலைச்சீரா நம் தலையைக் காக்கும். 

ஜெபம் : ஆண்டவரே எனக்குப் பாதுகாப்பையும், விடுதலையையும் தாரும். உம்மையல்லாமல் எனது நம்பிக்கை வேறு எதுவும் இல்லை. ஆமென்.

நாள் 68நாள் 70

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org