தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 73 நாள்

சமீபம்

ரேச்சல் கின்டர்கார்ட்டனில் படிப்பவள். ஒரு நாள் இரவில் தூக்கத்திலிருந்து விழித்து அழுது கொண்டிருந்தாள் ரேச்சல். தன் படுக்கையிலிருந்து தன் அப்பா அம்மாவிடம் போன பின்பு தான் அவளுக்க பயம் நீங்கியது. அவளது அம்மா சில நாட்கள் அலுவலக வேலை காரணமாக வெளியூருக்குப் போகவேண்டியிருந்தது. அப்பாவும் இரவில் தாமதமாக வரவேண்டியதாக இருந்தது. அவர் ஆயாவிடம் சொல்லி சாப்பாடு கொடுக்கச் சொல்லிவிட்டு, தொலைபேசியில் ரேச்சலிடம் சொன்னார், “நீ தூங்கு, அப்பா வந்து உன் பக்கத்தில் படுத்துக் கொள்வேன்.” அப்பா வந்த போது ரேச்சல் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். நடுவில் விழிக்கவும் இல்லை. காலையில் அப்பா கேட்டார், ”ரேச்சல் நான் வந்ததுவும் உனக்குத் தெரியாது. நீ நன்றாகத் தூங்கினாய், நடுவில் எழுந்திருக்கவும் இல்லையே?” ரேச்சல் சொன்னாள், “நீங்க தான் என் கூட இருப்பேன்னு சொன்னீங்களே?” “ஆனா நான் இருந்தேனா இல்லையான்னு உனக்குத் தெரியாதே? நீ தூங்கிக் கொண்டு தானே இருந்தாய்?” “நீங்க வருவேன்னு சொன்னீங்க. அதனால் தான்” என்றாள்.

ஒரு சிறு பெண்ணுக்குத் தனது தந்தை வருவார் என்ற நம்பிக்கை நல்ல தூக்கத்தைக் கொடுத்தது. உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனே இருக்கிறேன் என்று சொன்ன இயேசு நம்முடன் - சமீபமாய், இருக்கிறார் என்ற நம்பிக்கை நமக்கு உற்சாகத்தைத் தரவேண்டும். அத்துடன் உண்மையாய் அவரை நோக்கிக் கூப்பிடுவது முக்கியம்.

சிந்தனை : எங்கும் நிறைந்தவராக இருக்கும் கடவுளை நாம் உணர்ந்து கொள்ளவே உண்மையான ஜெபம் தேவையாக இருக்கின்றது.

ஜெபம் : ஆண்டவரே நீர் எங்கும் நிறைந்தவராக இருந்தாலும் நீர் என் அருகில் இருப்பதை உணரும் அளவுக்கு உம்முடன் எனது உறவை பலப்படுத்தும். ஆமென்.

நாள் 72

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org