தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 1 நாள்

சீரியல்


ராஜஸ்தானிலுள்ள அரண்மனை ஒன்றில் அந்தக்காலத்து அரசர்கள் தூங்கும் படுக்கை ஒன்றைக் காட்டினார்கள். அதில் படுத்திருப்பவரின் முதுகுக்கு மட்டுமே இடம் இருந்தது. எந்த நேரத்தில் எதிரிகள் வருவார்கள். யார் எப்போது தாக்குவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது என்பதால் அவர்கள் எப்போதுமே ஆயத்தமாக இருக்க வேண்டியிருந்தது. தாவீது தனது வாழ்க்கையில் சவுல் ராஜாவுக்குப் பயந்து காடுகளின் ஒளிந்து கொண்டிருந்த போதும், பின்னர் தனது மகன் அப்சலோம் தன்னைத் துரத்தியபோதும் காடுகளில் இப்படித் தான் தூங்கியிருப்பார்.

ஆனால் அவரது தூக்கத்திலும் ஒரு சுகமும், பாதுகாப்பு உணர்வும் இருந்திருக்கின்றது. நான் படுத்து நித்திரை செய்தேன். கடவுள் எனக்கு தூக்கத்தையும் பாதுகாப்பையும் தந்தார். விழித்துக் கொண்டேன், உயிருடன் இருக்கிறேன். கர்த்தரே என்னைத் தாங்குகிறார் என்று பாடுகிறார் தாவீது. சுற்றிலும் படைகள் எதிர்த்து நின்றாலும் தாவீதுக்குத் தன்னைத் தாங்கும் கடவுள் மேல் பெரும் நம்பிக்கை இருந்தது. அதனால் தான் ஒரு மாபெரும் நாட்டைக் கட்டி ஆண்டதுடன், பாடல்களை இயற்றுவதிலும், கடவுளுக்காக ஒரு தேவாலயத்தைக் கட்டுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைக்கவும் அவரால் முடிந்தது.

நமக்கும் வேலைகள், பொறுப்புகள், வசதிகள் பெருகும் போது நம் தூக்கத்தைக் கெடுக்கின்ற கவலைகளும், வியாதிகளும் வர வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றது. நம்மைக் கர்த்தர் தாங்குகிறார் என்ற நம்பிக்கை நமக்குத் தூக்கத்தைத் தரும். நிம்மதியைத் தரும். மேலும் மருந்துகளும் சிகிச்சைகளும் தரமுடியாத உறுதியைக் கடவுள் தருகிறார்.

சிந்தனை : தூக்கம் வரவில்லையே என்ற கவலையே தூக்கத்தைக் கலைத்துவிடும். ஆனால் கடவுள் தூக்கம் தருகிறார் என்னும் எண்ணம் தூக்கத்தையும் மன அமைதியையும் தரும்.

ஜெபம் : கடவுளே உம் மேல் உள்ள நம்பிக்கையில் நான் நிம்மதியாகத் தூங்க உதவி செய்யும். ஆமென்.

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org