தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 8 நாள்

நீதி

டென்மார்க் நாட்டை ஹிட்லரின் நாசிப்படைகள் தங்களுடன் சேர்த்துக் கொண்டதற்கு எதிர்ப்பாக போதகர் காஜ் மன்ங் பேசினார். தனது உடன் போதகர்களிடம் அவர் இவ்வாறாகப் பேசினார், “நான் பரிசுத்தமான கடவுளின் ஆலயமாக நிமிர்ந்து நிற்கிறோம். மற்றவர்கள் மற்ற விஷயங்களுக்குப் பொறுப்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் நாமோ உண்மைக்கு பொறுப்பு உள்ளவர்களாக இருக்கிறோம். நீதி அநீதி இரண்டுக்கும் நடுவே ஜீவ மரணப் போராட்டம் நடக்கும் போது இது சரியான போராட்டம் தானா என்று கேட்கக்கூடாது. அப்படிச் சொன்னால் எப்போதுமே சாத்தானே வெற்றி பெற்றுவிடுவான். நம்மிடம் மனதத்துவத்துக்கோ, புத்தகங்களுக்கோ பஞ்சம் இல்லை. நம்மிடம் இல்லாதது பரிசுத்த கோபம் ஒன்று தான்.” ஜனவரி 1944 இல் அவரை ராணுவத்தினர் வயல்வெளிக்கு இழுத்துச் சென்று அவர் உடலை துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்து எடுத்தார்கள்.

கடவுள் நீதியுள்ளவர், அவர் நீதியின் மேல் பிரியப்படுவார். ஆனால் நீதியைச் செய்யும் செம்மையானவர்களை அவர் நோக்கிப் பார்க்கிறார். தாவீது நீதிக்காகப் போராடிய ஒரு அரசன். அவரது வாழ்வின் பாவங்களை நீதியின் கடவுள் மன்னித்தார். மேலும் அவர் தனது வாழ்வில் கடவுளுக்குப் பிரியமாகவும், அவர் மேல் பக்தியுள்ளவராகவும் வாழ்ந்தார். அநீதியுள்ளவர்களைப் பற்றியும் அவர்கள் செய்யும் கொடுமையையும் பற்றி சொல்லிவிட்டு, கடவுள் நீதியுள்ளவர் என்றும் அநீதியுள்ளவர்களை அவர் வெறுக்கிறார் என்றும், செம்மையானவர்களை நோக்கி அவரது முகம் இருக்கிறதும் என்று சொல்லித் தனது மனதை உற்சாகப்படுத்திக் கொள்கிறார்.

சிந்தனை : நம்மைச் சுற்றியிருக்கும் அநீதிகளை நாம் பார்க்கிறோம். நாம் செம்மையானவர்களா என்று கடவுள் நம்மைப் பார்க்கிறார்.

ஜெபம் : ஆண்டவரே என் வாழ்வில் நீதி காணப்படவும், அநீதிக்கு எதிராக நிற்கவும் எனக்கு பெலன் தாரும். ஆமென்.

நாள் 7நாள் 9

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org