தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 7 நாள்

அப்பீல்

ஒரு பெரும் புயலின் நடுவே மெத்தடிஸ்ட் ஆலயம் ஒன்றில் ஒதுங்கியிருந்தார் சார்லஸ் ஸ்பர்ஜன். அன்று பிரசங்கம் செய்தவர் அந்த ஆலயத்தின் மூப்பர் ஒருவர். படிப்பறிவில்லாத அவர், ஒரு சில வாக்கியங்களைத் திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனாலும் ஸ்பர்ஜன் தனது வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணித்தார். அந்தப் புயலிலிருந்து மட்டுமல்ல அவரது வாழ்வின் பாவங்கள், நரகம், பிரச்சனைகளுக்கும் இரட்சிப்பின் மூலம் அடைக்கலம் கொடுத்தார் ஆண்டவர். மார்ட்டின் லூத்தரும் கூட இவ்வாறாக புயல் இடியில் மாட்டிக் கொண்டு ஆண்டவரே என்னைக் காப்பாற்றினால் ஊழியம் செய்கிறேன் என்று பொருத்தனை செய்தார். பிரச்சனைகளின் போது ஜெபிக்கிறவர்களுக்குக் கடவுள் பதிலளித்த பல சம்பவங்களை வேதாகமத்திலும் வரலாற்றிலும் நாம் பார்க்கமுடியும்.

கர்த்தர் அடைக்கலமும் தஞ்சமுமானவர் என்று பாடிய தாவீது, தனது வாழ்க்கையில் கடவுள் செய்த அற்புதங்களைப் பட்டியல் இடுகிறார். அத்துடன் இன்னும் இருக்கும் பிரச்சனைகளையும் கடவுளிடம் சொல்லி அவற்றிலிருந்து விடுவிக்கும்படியும் கடவுளிடம் வேண்டுதல் செய்கிறார். நமது ஜெபங்கள் கடவுளைப் பற்றிய உண்மைகளைத் துதிக்கிறதாகவும், அவர் நமக்குச் செய்தவற்றிற்காக நன்றி சொல்லுகிறதாகவும், இன்னும் நமக்குத் தேவையானவைகளுக்காக அவரிடம் மன்றாடுகிறதாகவும் இருக்க வேண்டும். இந்த சங்கீதத்தில் இந்த அம்சங்கள் இருக்கின்றன. மூன்று காலங்கள் மேலும் அதிகாரமுள்ள கடவுளிடம் இப்படித் தான் நாம் ஜெபிக்க வேண்டும். கடந்த கால நன்மைகளுக்காக நன்றி, இன்று அவர் மேல் விசுவாசம், நாளைய தேவைகளுக்காக நம்பிக்கை. இதுவே கடவுள் யார் என்பதை நமக்கும் உறுதியாகக் காட்டும்.

சிந்தனை : நேற்று அடைக்கலமாக இருந்தவர், இன்று அடைக்கலமாக இருப்பவர், நாளை அடைக்கலம் கொடுக்கப் போகிறவர். அந்தக் கர்த்தரே அடைக்கலமானவர்.

ஜெபம் : ஆண்டவரே நாம் எக்காலமும் நம்பும் எனது தஞ்சமாக இரும். ஆமென்.

நாள் 6நாள் 8

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org