தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 11 நாள்

கடவுள் இல்லை


கடவுள் இல்லை என்று சொல்லி அதிக கேலி செய்து கொண்டிருந்த ஒரு ஆசிரியருக்கு எப்படிப் பதில் சொல்வது என்று தெரியாது இருந்த ஒரு விசுவாசி கடைசியின் தைரியமும், சரியான கேள்வியும் கிடைத்ததால் ஆசிரியரிடம் கேட்டாள். ”கடவுள் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்?” “கடவுளை யாரும் பார்த்தது இல்லையே?” என்றார் ஆசிரியர். “உங்கள் மூளையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்றாள் விசுவாசி. “இல்லை” என்றார் ஆசிரியர். “இல்லையென்றால் எப்படி அதை நம்புகிறீர்கள்? உங்களுக்கு மூளை இல்லை என்று நான் சொல்ல முடியுமா?” என்று கேட்டாள் மாணவி.

கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்குப் பதில் சொல்லும் நிலையில் தாவீது இல்லை. மூடர்களிடம் ஏன் நேரத்தைச் செலவிட வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம். கடவுள் இல்லையென்று சொல்பவர்களில் பலர் தங்கள் மனம் போல மோசமான வாழ்க்கை வாழ்வதற்குத் தடையாக இருப்பதால் தான் கடவுளை வெறுக்கிறார்கள். ”தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்” என்று சொல்லும் தாவீது, அவர்கள் அக்கிரமக்காரர்கள் என்றும் அவர்கள் கடவுளைத் தொழுது கொள்ளுவதில்லை என்றும் சொல்கிறார்.

வானங்கள், படைப்புகள், இயற்கை, நமக்குள் இருக்கும் மனசாட்சி, கடவுளின் மக்கள் சொல்லும் சாட்சிகள், வேதாகமம், முன்மாதிரியான மக்களின் வாழ்க்கை யாவற்றையும் கண்டும் இவற்றைப் படைத்தவர் ஒருவர் இருக்க வேண்டுமே என்ற எண்ணம் வராதவர்கள் அறிவு இல்லாதவர்கள், மூடர்கள் என்றே வேதாகமம் கருதுகிறது. தங்களுக்குள்ளே சொல்லிக்கொள்வதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால் கடவுள் பேசுவதைக் கேட்க மறுக்கிறார்கள். ஆனால் கடவுளுக்குப் பயப்படுதலே ஞானம் என்று வேதம் சொல்கிறது.

சிந்தனை : தேவன் இருக்கிறார் என்னும் ஞானத்தை சாதாரண விசுவாசத்தால் நாம் பெற்றுக் கொள்ளலாம்.

ஜெபம் : ஆண்டவரே உமக்குப் பயப்படும் ஞானத்தை எனக்குத் தந்து, உம்மை மறுதலிக்காத மனம் தாரும். ஆமென்.

நாள் 10நாள் 12

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org