தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 16 நாள்

வாயில்லாப் பாடகர்கள்

ஒரு விண்வெளி வீரரும் இறையியல் அறிஞரும் பேசிக்கொண்டிருந்தனர். மத சம்பந்தப்பட்ட பல புத்தகங்களை வாசித்த பின் எல்லா மதங்களையும் ஒரே வாக்கியத்தில் அடக்கிவிடலாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறேன். அது பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதையே அவர்களுக்கும் செய்யுங்கள் என்பது தான் என்றார். சிறிது நேர அமைதிக்குப் பின் இறையியல் அறிஞர் சொன்னார், “விண்வெளியைப் பற்றி அதிகம் வாசித்த பின் விண்வெளியைப் பற்றியும் ஒரே வாக்கியத்தில் சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன்” என்றார். அது என்ன என்று கேட்டார் விண்வெளி வீரர். இறையியல் அறிஞர் பாடினார், “ட்விங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார். ஹவ் ஐ வொன்டர் வாட் யு ஆர்”

கடவுள் யார் என்பதையும் அவரது மகிமையும் புகழும் என்ன என்பதையும், அவரது படைப்புகளே இப்படி இருந்தால் அவர் எப்படி இருப்பாரோ என்ற பிரமிப்பையும் வானங்கள் ஏற்படுத்துகின்றன. அதே கடவுளின் வேதம் நம் கையில் இருக்கின்றது. அது எத்தனை மேன்மையானது என்பதை சங்கீதத்தின் மையப்பகுதியில் விளக்குகிறார் தாவீது. ”கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.” இவ்வாறு கடவுளின் படைப்பாகிய வானத்தையும் அவருடைய வேதத்தையும் பார்த்து அதிசயப்பட்டு நிற்பது மட்டும் போதாது, வேதத்தின்படி நமது வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதையும் தாவீது சொல்கிறார்: “அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.”
 

சிந்தனை : வானங்களைப் படைத்தவர் நமக்காக சிறப்பாக வேதத்தையும் படைத்திருக்கின்றார். அவருக்குக் கீழ்ப்படிவதே நமது பணியாகும்.

ஜெபம் : ஆண்டவரே நீர் படைத்த வானங்களைப் போல நானும் உமது மகிமையை வெளிப்படுத்தும் வாழ்க்கை வாழ எனக்குள்ளே செயல்படும். ஆமென்.

நாள் 15நாள் 17

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org