தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 17 நாள்

கார் அண்ட் பைக்

ஒரு பெரும் பணக்காரரின் கார் விபத்துக்குள்ளானது. வேடிக்கை பார்க்க வந்த அந்த ஊர் விவசாயியிடம் பணக்காரன் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார், “இது ஜெர்மன் கார், லட்சக்கணக்கான மதிப்புள்ளது. இன்ஷ்யூர் பண்ணியிருப்பதால் புதுக்கார் கிடைத்துவிடும்.” ”ஐயையோ உங்க இடது கையைக் காணோமே?” என்று வழிப்போக்கன் கேட்டபோது தான் ”ஐயையோ என்னோட ராடோ வாட்ச் இரண்டு லட்சம் விலையுள்ள வைர வாட்ச், காணாமப் போச்சே” என்று அலறிக்கொண்டே உடைந்து கிடந்த காருக்குள் தேடினார் பணக்காரன்.

நம்மிடம் இருக்கும் பொருட்கள் விலை உயர்ந்ததாக, மிகவும் புதிய மாடலாக இருந்தால் தான் நமக்கு மதிப்பு என்று நினைக்கிறோம். ஆனால் எல்லாவுமே ஒரு நாள் பழையவைகளாக, மதிப்பில்லாதவைகளாகப் போகத்தான் போகின்றன. அவைகளைப் பயன்படுத்தும் நாமும் முடிவே இல்லாமல் இந்த உலகத்தில் வாழப் போவதில்லை.

தாவீது தனது அரசாட்சியின் காலத்தில் கோவேறு கழுதையில் தான் பயணம் செய்ததாகச் சொல்லப்படுகின்றது. அந்தக் காலத்து வழக்கப்படி அரேபியக் குதிரையை வாங்காமல் இருந்ததற்கு ஒரு காரணம், குதிரையை நம்பாமல் கடவுளின் பெயரை நம்பியே வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அவர் பிற நாட்டு மக்களுடன் தங்கள் நாட்டு மக்களை ஒப்பிடுகிறார். சிலர் இரதங்களையும் குதிரைகளையும் குறித்து மேன்மை பாராட்டுகிறார்கள். நாங்களோ கடவுளின் பெயரைப் பற்றியே மேன்மை பாராட்டுவோம் என்கிறார். கோலியாத்தை ஜெயித்த போதும் தாவீது கடவுளின் பெயரால் வருகிறேன் என்று சொல்லித்தான் சென்றார். இப்போதும் அதையே சொல்கிறார்.

சிந்தனை : கடவுளின் பெயரில் மேன்மை பாராட்டும் அளவுக்கு நமக்கு அவருடன் உறவு நெருக்கமாக இருக்கின்றதா?

ஜெபம் : ஆண்டவரே உம்மைப் பற்றியும் உமது பெயரைப் பற்றியும் மட்டுமே மேன்மை பாராட்ட எனக்கு வாய்ப்புக்களைத் தாரும். ஆமென்.

நாள் 16நாள் 18

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org