தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
பை பாஸ் இல்லை
ஒரு தகப்பனும் மகளும் உயரமான புல்லுள்ள காட்டுக்குள் நடந்து சென்று கொண்டிருந்தனர். தூரத்தில் காட்டுத்தீ அவர்களை நோக்கி வருவது தெரிந்தது. அது கண்டிப்பாக அவர்களைக் கொன்றுவிடும் என்பது அவர்களுக்குப் புரிந்துவிட்டது. தப்புவதற்கு ஒரே ஒரு வழி உண்டு என்பது தகப்பனுக்குத் தெரியும். அவர்கள் நிற்கும் இடத்தின் ஒரு பகுதியைத் தீவைத்து வெறும் தரையாக மாற்றிவிட வேண்டும் என்பதுவே அந்த வழி. பெரிய காட்டுத் தீ வரும் போது அவர்கள் ஏற்கனவே தீ வைத்து புல் இல்லாமல் வெறும் தரையாக மாற்றி வைத்த இடத்தில் நின்று கொள்ள வேண்டும். காட்டுத்தீயின் பெரும் சத்தமும் வெப்பமும் மகளை பயப்படுத்தியது. ஆனால் தகப்பன் சொன்னார், “பயப்படாதே நாம் ஏற்கனவே தீப்பிடித்த இடத்தில் தான் நிற்கிறோம். தீ நம் அருகில் வரமுடியாது” என்றார்
தாவீதின் காலத்தில் அவர் ஆடுகளை மேய்க்கும் போது தன்னை ஒரு ஆடாகவும் கடவுளை ஒரு மேய்ப்பனாகவும் கற்பனை செய்து எழுதிய இந்த சங்கீதம் உலகம் எங்கும் மிகவும் பிரபலமானதாகும். ஆனால் நமது நல்ல மேய்ப்பனாகிய இயேசு நம்மைப் பாதுகாக்கிறார். அவர் ஏற்கனவே மரணத்தை ருசிபார்த்து, அதை வெற்றி கொண்டதால் அவர் மரண் இருளின் பள்ளத்தாக்கில் நம்முடன் கூட இருக்கிறார். நாம் ஆபத்தை நினைத்துப் பயப்பட வேண்டியதில்லை. மரண இருள் என்பது பலவிதமான அனுபவங்களைக் குறிக்கக் கூடியது. மரணத்துக்கு அருகில் வரை போய்த் திரும்பும் விபத்துக்கள், வியாதிகள் போன்ற அனுபவங்களை இது குறிப்பிடலாம். நாமும் நமது ஆபத்தான சூழ்நிலைகளில் பயப்படாமல் நம்முடன் இருக்கும் கடவுளை நம்பி தைரியமாக இருக்கலாம்.
சிந்தனை : விசுவாசி மரணத்துக்குப் பயப்பட வேண்டியதில்லை. மரணத்தின் இந்தப் பக்கத்தில் இயேசுவின் உதவி உண்டு. அந்தப் பக்கத்திலும் அவரது ராஜ்யத்தில் அனுமதி உண்டு.
ஜெபம் : ஆண்டவரே ஆபத்துக்களில் நீர் உடன் இருப்பதை நம்பி பயப்படாமல் இருக்கும்படி என்னை ஆயத்தப்படுத்தும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org