தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 25 நாள்

ரைட் நம்பர்

நாம் ஜெபிப்பது தொலைபேசியில் பேசுவது போல என்று உவமையாக வைத்துக் கொண்டால், நாம் கடவுளிடம் பேசுகிறோம். ஆனால் அடுத்த முனையில் நாம் பேசுவதை யாராவது கேட்கிறார்கள் என்று தெரிந்தால் தான் நாம் தொடர்ந்து பேசுவோம். தாவீது தனது ஜெபங்களைக் கர்த்தர் கேட்டார் என்று உறுதியாகச் சொல்கிறார். அதற்காக கடவுளைத் துதிக்கவும் செய்கிறார். 

அவருக்கும் சந்தேகப்படும் சூழல்கள் வந்திருக்கத்தான் செய்யும், “நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும், நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்” என்று புலம்புகிறார். ”என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்” என்று ஜெபிக்கிறார்.

”என் இருதயம், அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்” என்று தனது ஜெபத்துக்குப் பதில் கிடைத்த அனுபவங்களையும் சொல்லி, ”நான் சகாயம் பெற்றேன், ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்” என்று தனது பாடல்களின் காரணத்தைச் சொல்கிறார்.

நமது ஜெபங்கள் சில நேரங்களில் வீணாகப் போவது போல் இருக்கலாம் ஆனால் நாம் பேசிக்கொண்டிருப்பது ராங் நம்பர் அல்ல என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஆனால் ஜெபத்திற்குப் பதிலோ, ஜெபத்தில் கேட்டதுவோ கிடைக்க தாமதமாகிறது என்றால் சோர்ந்து போகக் கூடாது. கேட்காதது கிடைக்கும் போது குழம்பிவிடக்கூடாது. சில நேரங்களில் பதிலும் விரும்பியவைகளும் கிடைப்பதில்லை. ஆனால் ஜெபத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டால் நம்மால் இந்த உலகத்தில் பக்தியுடன் வாழ முடியாது. ஜெபத்திற்கான பதில்கள் ஆம் என்றோ, இல்லை என்றோ காத்திரு என்றோ எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நமக்கு வேண்டும். 

சிந்தனை : கடவுள் தரும் பதில் அது நமது விருப்பப்படி இல்லாவிட்டாலும் சிறப்பானதாக இருக்கும்.

ஜெபம் : தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்; அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும். ஆமென்.

நாள் 24நாள் 26

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org