தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
கோவேறு கழுதை
ஆண்டவர் நம்மை அவரிடம் இழுப்பதற்காக நமது முரட்டாட்டமான நிலையில் வார், கடிவாளம் போன்றவற்றை உபயோகிப்பார். கீழ்க்கண்டவைகள் அவர் அனுப்பும் இப்படிப்பட்ட அனுபவங்களாக இருக்கலாம்:
* நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
* இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால் என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று.
* துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு;
ஆனால் இப்படிப்பட்ட அனுபவங்கள் வரும் போது நாம் கடவுளிடம் திரும்ப வேண்டும். மன்னிப்புடன் புது வாழ்வும் கிடைக்கும். “நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.”
அப்படி மன்னிக்கப்பட்ட நபர் பாக்கியவான் என்கிறார் தாவீது. மேலும் மன்னிப்புப் பெற்ற பின் கிடைக்கும் பாதுகாப்பும் மேலானது. ”மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது.” அத்துடன் மேலும் நமது வாழ்க்கையில் தீமை வராதபடி ஆண்டவர் நமக்கு ஆலோசனைகளைத் தருவார். ”நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.”
மனந்திரும்பிய செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள். என்று பாடி முடிக்கிறார் தாவீது.
சிந்தனை : புத்தியுள்ள குதிரையும் கழுதையும் வார், கடிவாளம் இல்லாமலேயே எஜமானிடம் போகும்.
ஜெபம் : ஆண்டவரே நான் உம்மிடம் அன்பினால் நெருங்கி வரவும், உம் ஆலோசனைகளைப் பெற்று சிறப்பாக வாழவும் வரம் தாரும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org