தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 30 நாள்

காலரைத் தூக்கிவிடு

வில்லியம் கேரி என்னும் மாபெரும் மிஷனரி ஊழியர் இந்தியாவுக்கு வந்து ஊழியம் செய்வதற்கு முன் இங்கிலாந்தில் உள்ள செருப்புத் தைக்கும் கடையில் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டார். மேரி ஸ்லெஸ்ஸர் என்னும் மிஷனரியும் ஒரு ஆலையில் தான் கிறிஸ்துவுடன் வாழும் வாழ்வைத் துவக்கினார். டேவிட் லிவிங்ஸ்டன் என்னும் சிறந்த ஊழியர் பஞ்சு நூற்கும் ஆலையில் இயேசுவை தன் வாழ்வுக்கு ஆண்டவராக்க்கினார். ஜான்பன்யன் உடைந்த பானைகளை சரிசெய்து கொடுத்துக் கொண்டிருக்கும் போது நடு வீதியில் இயேசுவைத் தன் வாழ்வின் இரட்சகராக்கினார். இயேசு இரட்சகராகப் பிறந்த செய்தியையும் முதலாவதாகக் கேள்விப்பட்டவர்கள் சாதாரணமான ஆடு மேய்ப்பவர்கள் தாம்.

சிறுமை என்பது தான் கடவுளின் பார்வையில் மேன்மையாக இருக்கின்றது. ஏனென்றால் பெருமையுள்ளவர்கள் தங்களை கடவுள் நிலைக்கு உயர்த்துவதால் அவர்களுக்குக் கடவுள் எதிர்த்து நிற்பதாக வேதம் சொல்கிறது. தாவீது தனது பாடுகளை எல்லாம் மாற்றிப் போட்டவர் ஆண்டவர் என்று பெருமையாகச் சொல்லும் போது சிறுமைப்பட்டவர்கள் மகிழ்வார்கள். இந்தப் பெருமை, மேன்மைபாராட்டுதல் கடவுளுக்குள் என்பதால் சிறுமைப்பட்டவர்களுக்கு அது ஒரு ஆறுதலாகவும் அறிவுரையாகவும் இருக்கும். எனவே தான் தாவீது தன் கடவுளைப் பற்றியே மேன்மை பாராட்டுகிறார்.

இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். தாவீதின் இந்த தாழ்மை தான் அவரை உயர்த்தியிருக்கின்றது. கடவுளின் இருதயத்துக்கு ஏற்றவராகவும், உலகத்தில் பல கோடி கிறிஸ்தவர்களின் அபிமான பாடலாசிரியராகவும் தாவீது இருக்கக் காரணம் அவரது தாழ்மையும், கடவுள் அதற்குக் கொடுத்த பலனும் தான்.
 

சிந்தனை : பெருமையுள்ளவர்களை எல்லோரும் வெறுப்பார்கள். ஆனால் கடவுளுக்குள் மேன்மைபாராட்டுதல் சிறுமைப்பட்டவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

ஜெபம் : ஆண்டவரே உம்மில் மட்டுமே நான் மேன்மை பாராட்டவும், தாழ்மையானவர்களுடன் இணைந்து மகிழவும் எனக்கு இரக்கம் செய்யும். ஆமென்.

நாள் 29நாள் 31

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org