தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
விசாரன்
ஜான் லென்னன் என்னும் பிரபல பீட்டில்ஸ் குழுவின் உறுப்பினரை மார்க் டேவிட் சேப்மன் என்பவர் கொலை செய்தார். சிறையில் இருக்கும் போது மார்க் சொன்ன வார்த்தைகள் இவைகள் : ஜான் லென்னனைக் கொன்றதற்காக நான் வருத்தப்படுகிறேன். ஆனால் கொலை என்பது மட்டுமே என்னை ஒரு தீயவனாக மாற்றிவிடாது. ஒரு மனிதனின் முழு வாழ்க்கையையும் அவனது ஒரே ஒரு செயலின் மூலம் நீங்கள் தீர்ப்பு செய்யக் கூடாது. ஜான் லென்னனைக் கொலை செய்வதற்கு முன்பு நான் ஒரு நல்ல ஒரு மனிதனாகத் தான் இருந்தேன். எல்லா மனிதர்களுக்கு உள்ளேயும் ஒரு சிறு தீய குணம் இருக்கும். எனது தீய குணம் என்னை கட்டுப்படுத்தி கொலை செய்ய வைத்துவிட்டது.
நமது குற்றங்களுக்காக வருத்தப்படுவது மட்டும் போதாது. இந்த உலகத்தில் நாம் செய்யும் எந்த தீய செயலுக்கும் ஒரு காரணத்தைச் சொல்லி நம்மை நாமே திருப்திப்படுத்தி ஏமாற்றிக் கொள்ளலாம். உண்மையாக நமது பாவங்களுக்காக வருத்தப்படுவது முக்கியம். பிடிபட்டுக்கொண்ட குற்றவாளி கூட வருத்தப்படுவான், பிடிபட்டுவிட்டேனே என்றோ, எல்லோருக்கும் விஷயம் தெரிந்துவிட்டதே என்றோ அவன் நினைக்கலாம். ஆனால் கடவுளுக்கும் மற்ற மனிதர்களுக்கும் எதிராக நான் பாவம் செய்து விட்டேனே என்ற வருத்தம் வராமல் மனவருத்தத்தில் பயன் இல்லை.
மன வருத்தத்துடன் இனி அந்தப் பழைய வழியில் நடக்க மாட்டேன் என்கிற தீர்மானமும் இருக்க வேண்டும். அது தான் மனந்திரும்புதல் ஆகும். மனவருத்தம் மட்டும் போதாது. ஆண்டவரிடம் பாவங்களை அறிக்கையிட்டு, இனி புது வாழ்க்கை வாழுவேன் என்கிற உறுதியான தீர்மானமும் வேண்டும்.
சிந்தனை : வருத்தத்தைவிட திருப்பமே முக்கியமானது.
ஜெபம் : கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும்; உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும். கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org