தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
இரக்கம்
விக்டர் ஹ்யூகோவின் லெஸ் மிசரபிள்ஸ் என்னும் நாவலில், ஜான் வால்ஜான் என்பவன் தன் தங்கையின் குடும்பத்தின் பசியைப் போக்க ஒரு ரொட்டியைத் திருடியதற்காக 19 வருடங்கள் சிறையிலிருந்துவிட்டுத் திரும்பி வருகிறான். கசப்பு உணர்ச்சியுடன் வந்த அவனை ஒரு பிஷப் மட்டுமே நட்புடன் வரவேற்கிறார். ஆனால் அவரது வெள்ளிப்பாத்திரங்களில் சிலவற்றை அவன் திருடி, காவலர்களிடம் கையும் களவுமாகப் பிடிபட்டுவிடுகிறான். அவன் மேல் புகார் பதிவு செய்யும்படி காவல் நிலையத்துக்கு பிஷப் அழைக்கப்படுகிறார். ஆனால் அவர் வீட்டிலிருந்து வெள்ளி விளக்குகளையும் பிஷப் கொண்டு வந்து அவனிடம் கொடுத்து, இவையெல்லாம் நான் அவனுக்கு பரிசாகக் கொடுத்தவைகள், இதைக் கொடுக்க மறந்துவிட்டேன் என்று சொன்னார்.
ஜான் முற்றிலுமாக மாறிவிடுகிறான். மேலும் ஒரு அனாதைக் குழந்தையைத் தன் குழந்தையாக எடுத்து வளர்க்கிறான். அவனை மீண்டும் சிறையில் போட விரும்பிய காவலர்களை அவன் மன்னிக்கிறான். கடைசியில் அவன் இறக்கும் போது பிஷப் கொடுத்த அந்த வெள்ளி விளக்குகளைத் தன் கைகளில் பிடித்தவாறே இருக்கிறான். அவனுக்கு இரக்கம் காட்டப்பட்டதால் அவன் பிறருக்கும் இரக்கம் காட்டினான். இது தான் அவன் வாழ்வில் நடந்தது.
இயேசுவும் தன் எஜமானிடம் அதிக பணத்தைச் செலுத்த முடியாமல் இருந்தும் கடன் ரத்து செய்யப்பட்டு இரக்கம் பெற்ற ஒருவன் தன்னிடம் சிறு தொகை கடன் வாங்கியவனை மன்னிக்காமல் விட்டதை உவமையாகச் சொல்லி அவனுக்குத் தண்டனை கிடைத்தது என்று போதித்தார். மேலும் ”இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.” என்று தனது மலைப்பிரசங்கத்தில் சொல்லியிருக்கின்றார்.
சிந்தனை : கடவுளிடம் இரக்கம் பெற்றவர்களால் மனிதருக்கு இரக்கம் காட்டாமல் இருக்க முடியாது.
ஜெபம் : கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும். நானும் இரக்கம் காட்டும் வாய்ப்புக்களைத் தாரும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org