தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
தினமும் என்னைக் கவனி
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு புது நபராக மாறுகிறான் என்பது உங்களுக்குத் தெரியுமா? சுமாராக ஒவ்வொரு ஏழு வருட காலத்திலும் நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லும், ஒவ்வொரு அணுவும் இறந்து அதன் இடத்தில் இன்னொரு செல் புதிதாக வந்துவிடுகின்றது. ஏழு வருடங்களுக்கு முன்பு உங்கள் உடலில் இருந்த ஒரு அணு கூட இப்போது உங்கள் உடலில் இருக்காது. இதுவே ஏழுவருட மாற்றம் என்று அழைக்கப்படுகின்றது.
தாவீதின் வாழ்வில் சோதனையும், பாவமும், வீழ்ச்சியும் மீண்டும் வெற்றியும் கிடைத்தது நமக்குத் தெரியும். அவர் தனது வாழ்வில் மீண்டும் மீண்டும் கடவுள் தனது புதுப்பிக்கும் செயலைச் செய்ய வேண்டும் என்று ஜெபிக்கிறார். உறுதியாக இருக்கும் ஒரு ஆவியை என் உள்ளத்தில் புதுப்பித்துக் கொண்டே இரும். எனது இருதயத்தை சுத்தமாக்கி பின்னர் அடிக்கடி மீண்டும் மீண்டும் சுத்தமாக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் அவரது ஜெபத்தின் விளக்கமாகும்.
நம் வாழ்விலும் கூட ஒரு குறிப்பிட்ட நாளில் நான் இயேசுவை ஏற்றுக் கொண்டேன், இரட்சிக்கப்பட்டேன் என்று சொல்வது ஒரு துவக்கம். அது சுத்த இருதயத்தைக் கடவுள் நம்மில் உருவாக்கும் செயலாகும். ஆனால் ஒவ்வொரு நாளும் நமது உள்ளத்திலே ஆண்டவர் புதுப்பிக்க நாம் அனுமதிக்க வேண்டும். அப்படிச் செய்தால் தான் சுத்த இருதயம் சுத்தமாக இருக்கும். இல்லையென்றால் சிறிது சிறிதாக அழுக்குகளும் தூசிகளும் நமது இருதயத்தைப் பாழாக்கிவிடும். தினசரி வேததியானம், ஜெபம் இதனால் தான் முக்கியம் என்று வலியுறுத்தப்படுகின்றது.
சிந்தனை : நல்ல ஆரம்பம் மட்டும் போதாது, நல்ல முடிவு வேண்டுமானால், நல்ல பராமரிப்பும் தினசரி வேண்டும்.
ஜெபம் : தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org