தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
சுமைதாங்கி
பேருந்தில் ஏறிச் சென்ற ஒரு விவசாயி தனது தலையில் இருந்த புல்லுக்கட்டை கீழே இறக்கி வைக்காமல் தலையிலேயே சுமந்து கொண்டு இருந்தாராம். ஐயா நீங்கள் அந்தப் புல்லுக்கட்டை கீழே வைத்துவிட்டு இந்த இருக்கையில் உட்காரலாமே என்று உடன் பயணம் செய்தவர்கள் சொன்னதற்கு, நான் எனக்கு மட்டும் தான் டிக்கட் எடுத்திருக்கிறேன். என் சுமை என் தலையிலேயே இருக்கட்டும். என் சுமை என் தலையில் இருந்தால் இன்னும் சில பேர் பஸ்ஸில் ஏறலாம் அல்லவா? இன்னும் பஸ்ஸுக்கு அதிக சுமையைக் கொடுக்க வேண்டாம் என்று நினைக்கிறேன் என்றாராம்.
நாம் கடவுள் மேல் நமது பாரத்தை வைத்தபின் தொடர்ந்து கவலையுடன் இருக்கக் கூடாது. அவர் ஆதரிப்பார் என்ற நம்பிக்கை நம்மிடம் இருக்க வேண்டும்.
கடவுள் மேல் பாரத்தை வைத்தல் என்றால் என்னவென்று தாவீது வரிசைப்படுத்துகிறார்: 1) என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும். - ஜெபத்தில் தன் பாரத்தை இறக்கிவைக்கிறார். 2)என் தியானத்தில் முறையிடுகிறேன் - வேதவசனத்தை தியானிக்கையில் பாரம் இறங்குகிறது. 3) நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன் - உதவிக்காகப் பிறரை விட ஆண்டவரையே அதிகம் நம்பியிருப்பதால் பாரம் குறைகிறது. 4) அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன் - பாரம் ஏற ஏற நாளில் பல சூழல்களில் தியானம் செய்து ஜெபிக்கிறார். 5) நானோ உம்மை நம்பியிருக்கிறேன் - விடாமல் தனது நம்பிக்கையில் உறுதியாய் இருக்கிறார். “நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” என்ற நம்பிக்கை அவரைத் தொடர்ந்து தனது பாரங்களுடன் பயணம் செய்ய ஆற்றல் கொடுக்கின்றது.
சிந்தனை : இறக்கி வைத்த பாரத்தை திரும்பத் தூக்காமல் விடுதலை பெறுவதற்கு ஆண்டவரால் மட்டுமே முடியும்.
ஜெபம் : தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும். எனக்குச் செவிகொடுத்து, உத்தரவு அருளிச்செய்யும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org