தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
ரீ சார்ஜ்
பிரிட்டிஷ் எழுத்தாளரும் மருத்துவருமான ஏ ஜே க்ரோனின் மருத்துவராக இருந்த போது டிப்தீரியா என்னும் மூச்சுத்திணறல் நோய் வட இங்கிலாந்தில் வேகமாகப் பரவியது. பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன் மூச்சு விடமுடியாத சூழ்நிலையில் அவனது மூச்சுக்குழாயில் துளை போடப்பட்டது. ஒரு இளம் நர்ஸ் அவனை இரவு முழுவதும் பார்த்துக் கொள்ளும் பொருப்பில் இருந்தார். நடுஇரவில் அவன் இறந்து போனான் என்னும் சோக செய்தியுடன் ஒரு நர்ஸ் அவரை எழுப்பினார். கவனித்துக் கொண்டிருந்த நர்ஸ் களைப்பில் தூங்கிவிட குழாய் அடைபட்டு சிறுவன் இறந்துவிட்டான். மருத்துவர் மிகவும் கோபமடைந்து அந்த நர்ஸ் இனி ஒரு போதும் யாரையும் கவனிக்கக் கூடாது, என்று வேலையை விட்டு நீக்கும் கடித்தத்தை எழுதிவிட்டார்.
தூக்கம் வராமல் புரண்டு படுத்த அவர் கண்களில் ”இன்னும் ஒரே ஒரு வாய்ப்புக் கொடுங்கள் டாக்டர்” என்று கெஞ்சிய நர்ஸின் முகமே திரும்பத் திரும்பத் தெரிந்தது. மறுநாள் காலையில் வேலை நீக்கக் கடிதத்தை கிழித்துவிட்டு நர்ஸுக்கு மறுவாய்ப்புக் கொடுத்தார்.
பல வருடங்களுக்குப் பின்பு அவர் அதே நர்ஸை, பெரிய பெண்ணாக, இங்கிலாந்திலேயே பெரிய குழந்தைகள் மருத்துவமனையின் தலைமை நர்ஸ் ஆக சந்தித்தார். தனது அர்ப்பணிப்பு மற்றும் தாதிக்கான திறமைகளில் அவர் மிகவும் பிரபலமானவராக இருந்தார். அந்த இளம் பெண் தனக்குக் கொடுக்கப்பட்ட இரண்டாம் வாய்ப்பை மிகவும் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்.
இஸ்ரவேலின் வரலாறும் பல இரண்டாம் வாய்ப்புக்களால் நிறைந்தது. தாவீது சொல்லும் இதே அனுபவங்கள் நமது ஆன்மீக வாழ்விலும் இருக்கின்றன அல்லவா? வாய்ப்பைப் பயன்படுத்தாதவர்கள் குற்றவாளிகளே!
சிந்தனை : இரண்டாம் வாய்ப்பை மூன்றாவது தடவை எதிர்பார்ப்பது, கணக்கிலும், ஒழுக்கத்திலும் தவறானது.
ஜெபம் : தேவனே நீர் எங்களைக் கைவிட்டீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org