தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
நெருக்கம் நல்லது
கற்பனை வளத்துடன் ஆக்கபூர்வமாக சிந்திப்பவர்கள் பெரும்பாலும் தங்கள் தாயைப் போலவே இருப்பார்களாம். நன்றாக வாசிப்பார்கள், அதிகமாகப் பகல் கனவு காண்பார்கள். அவர்கள் அதிக அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டிய அவசியமிலை. ஆனால் ஆக்கப்பூர்வமாக இருப்பதைப் பற்றி அவர்களால் கற்றுக் கொள்ள முடியும். அதிக அழுத்தம் இருந்தாலும் ஆக்கசக்தி நெருக்கப்பட்டுவிடும். பிரச்சனையிலிருந்து சிந்தனையை வேறு இடத்துக்குத் திருப்புவது நல்ல பலனைக் கொடுக்கும். சிறிதளவு அழுத்தம் இருந்தால் அது ஞாபகசக்திக்கும், புதுமையான சிந்தனைக்கும் வழி காட்டும். அளவுக்கு அதிக நம்பிக்கை கஷ்ட்டப்படுத்தலாம். தூக்கமும் கூட மனதின் ஆழத்தில் தீர்வுகள் காணப்பட உதவுகிறது.
தாவீது ஒரு கற்பனை வளம் உள்ள பாடலாசிரியராக இருந்தார். அவருக்கு நெருக்கம் உண்டாகும் போதெல்லாம் அவர் கடவுளை சார்ந்து அவரிடத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டு பாடல்களை எழுதியிருக்கிறார். ”நானோ உம்முடைய வல்லமையைப் பாடி காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.”
தாவீதுக்கு சிறுவயதிலிருந்தே நெருக்கம் துவங்கிவிட்டது. உடன் பிறந்தவர்கள், காட்டு மிருகங்கள், கோலியாத் என்னும் அரக்கன், சவுல் அரசன், அப்சலோம் என்னும் எதிரியாக மாறிய சொந்த மகன், பெலிஸ்திய அரசர்கள், தனது சொந்த இச்சை, பாவம், குற்ற உணர்ச்சி, உள் நாட்டிலேயே அவரை எதிர்த்து விமர்சித்தவர்கள் என்று அவர் நெருக்கப்படாத காலமே இருந்திருக்காது என்று சொல்லலாம். ஆனால் அவர் கடவுளை அந்த அளவுக்குத் தனது தஞ்சமாக அடைக்கலாமாக வைத்திருந்ததால் அந்த நெருக்கங்கள் அவருக்குப் பாடுகளைத் தராமல் பாட்டுகளைத் தந்தன.
சிந்தனை : நெருக்கங்கள் ஆண்டவரிடம் நம்மை நெருங்கச் செய்யும். பாடுகள் அவர் மேல் பாட்டுகளைப் பாடச் செய்யும்.
ஜெபம் : என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org