தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

ஸ்பரிசம்
நம் அனைவருக்குமே அழுகிப் போகின்ற உடல் தான் இருக்கின்றது. ஆனால் நமது ஆத்துமாக்கள் நித்தியகாலமாக வாழக்கூடியது. நமது உடலில் குடியிருக்கும் தெய்வீகம் ஆகும். - ஃப்ளேவியஸ் ஜோசிஃபஸ்.
தாவீதைப் பொறுத்தவரை தனது ஆத்துமாவும் மாம்சமும் கடவுளைக் காண ஆசையுடன் இருக்கிறது என்று எழுதியிருக்கின்றார். தாகம், ஆசை, திருப்தி, வாஞ்சை என்று உடல் சம்பந்தப்பட்ட வார்த்தைகளைக் கடவுளை அனுபவிப்பதில் அவர் பயன்படுத்துகிறார்.
இந்தக் காலத்திலும் நாம் இப்படி அனுபவங்களை எதிர்பார்க்கிறோம். நமது உடலில் கடவுளை அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். ஆனால் உடல் மற்றும் ஆத்துமாவில் ஏற்படும் வித்தியாசங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக சாப்பிட்டது போன்ற திருப்தியை நம் உடலுக்குக் கடவுள் தர முடியாது. சங்கீதங்கள் கவிதைகளாக இருப்பதுவும், உவமைகளாக சொல்லப்படுவதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
இயேசுவோ, கண்டு உடல் பூர்வமாக விசுவாசிக்கிறவர்களை விட காணாமல் விசுவாசிப்பவர்கள் பாக்கியவான்கள் என்கிறார். பவுல், ”இப்போது கண்ணாடியில் நிழலாட்டமாகப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்” என்கிறார். மேலும் இயேசு மனித உடலில் வந்து நமக்கு கடவுளின் சாயல் மற்றும் தன்மைகள் எப்படி இருக்கும் என்பதை நமக்குக் காட்டியிருக்கிறார்.அது வேதாகமத்தில் நமக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அவர் நம்மைப் புரிந்து கொண்டு நமக்காகப் பரிந்து பேசுகிறவராகவும் இருக்கின்றார். அவர் உயிர்த்தெழுந்தது போல நாமும் நமது உடல் உயிர்த்தெழும் போது அவரை நேரில் காணுவோம். அந்தப் பரலோக அனுபவத்திற்காக நாம் இந்த உலகத்தில் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம்.
சிந்தனை : ஆவியாக இருக்கும் கடவுளை இந்த உலகத்தில் இருக்கும் வரை நாம் மாம்சக் கண்ணால் பார்க்க முடியாது.
ஜெபம் : ஆண்டவரே காணாமலும் விசுவாசிக்கும் அளவுக்கு என்னைப் பாக்கியவதியாக பாக்கியவானாக மாற்றும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org