தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
ஐஸ்வர்யன்
ஆண்ட்ரூ கார்னகி என்னும் மிகப் பெரிய பணக்காரர் எப்போதுமே தாராள குணம் உள்ளவராக இருந்திருக்கிறார். கோடீஸ்வரர்கள் எப்போதாவது தான் சிரிப்பார்கள் என்று சொல்லும் அவர் அதற்காகவே தாராள குணத்துடன் இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார். பணத்திலும் வயதிலும் அவர் வளர வளர அவருக்குப் பணம் என்றாலே அலர்ஜி என்று சொல்லும் அளவுக்கு மாறிவிட்டார். பணத்தைப் பார்த்தாலோ தொட்டாலோ கோபம் வருந்ததால் அவர் எப்போதுமே தன் கையில் பணத்தைக் கொண்டு போவது இல்லை. ஒரு தடவை அவர் கையில் பணம் இல்லாததால் லண்டன் ட்ராம் வண்டியிலிருந்து நடுவழியில் இறக்கி விடப்பட்டாராம்.
வேதாகமம் பணத்துக்கு எதிரியல்ல. செல்வத்துக்கும் எதிரி அல்ல. ஆனால் பண ஆசையும், கடவுளின் இடத்தில் பணம் வருவதும் தான் வேதாகமத்துக்கு எதிரானது. உண்மையாகவே மிகப் பெரும் பணக்காரர்களாக இருந்தவர்களில் பலர் கடைசியில் பணத்தை வெறுத்திருக்கிறார்கள். ஒரு நாட்டுக்கு அரசனாக இருந்து செல்வத்தில் மிதந்த அனுபவமும், காட்டுக்குள் பட்டினியாகத் திரிந்த அனுபவும் பெற்றிருந்த தாவீது சொல்கிறார், பணம் பெருகினால் அதன் நினைவாகவே இருக்காதீர்கள் என்று. ”என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது” என்கிறார் தாவீது. பணத்தின் மேல் தங்கள் இருதயத்தை வைக்கிறவர்கள் பணம் தான் தங்களைக் காப்பாற்றுவது என்றும், பணம் தான் தங்கள் மகிமை என்றும், பணமே தங்களுக்குப் பெலனாக இருக்கிறது என்றும் நினைக்கிறார்கள். ஆனால் தாவீதுக்கு எல்லாவுமே கடவுள் தான்.
சிந்தனை : இந்த உலகத்தைப் படைத்து அதை நடத்தி வரும் ஆண்டவர் நம்முடன் இருக்கும் போது என் கையில் பணம் இல்லாவிட்டாலும் நான் பெரும் செல்வந்தன் தான்.
ஜெபம் : ஆண்டவரே நீரே எனக்கு எல்லாம் என்பதைப் புரிந்து கொள்ள உதவும். பணத்தை அதற்கான இடத்தில் மட்டுமே வைக்க எனக்கு உதவும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org