தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
வார்த்தை அம்பு
ஒரு மடத்தில் உள்ள துறவி தலைவரிடம் போய் நான் கோள் சொல்லியிருக்கிறேன் என்று அறிக்கையிட்டார். தலைவரும் துறவியை அந்த நகரத்திலுள்ள ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு இறகை வைத்து வரும்படி சொன்னார். பின் அவற்றை எல்லாம் திரும்பவும் சேகரித்து வருமாறு சொன்னார். அது நடக்காத விஷயம் என்றார் துறவி. அவைகள் ஊர் முழுவதும் காற்றில் பரவியிருக்குமே என்றார் அவர். உன் வார்த்தைகளும் அப்படித்தான் பரவியிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள் என்றார் தலைவர்.
பிறரைப் பற்றிப் பேசுவது என்பது எல்லோருக்குமே ருசிகரமாக இருக்கின்றது. அது ருசியுள்ள பதார்த்தம் போல நமக்குள் இறங்கும் என்று நீதிமொழிகள் புத்தகம் சொல்கிறது. மற்றவர்களைப் பற்றி நாம் பேசுவதை பிறர் ரசித்துக் கேட்டாலும் நம்மைப் பற்றிய அவர்களது எண்ணங்கள் எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியாது. இதே நபர் நம்மைப் பற்றியும் மற்றவர்களிடம் இப்படித் தானே பேசுவான் என்னும் எண்ணம் அவர்களிடம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. பிறரைப்பற்றி சொல்லும் வார்த்தைகளால் சொல்பவரின் மதிப்பே கெட்டுப் போகும்.
”அவர்கள் தள்ளப்பட்டு, கீழேவிழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; அவர்களைக் காண்கிற யாவரும் ஓடிப்போவார்கள்.” என்று தீய நாவுள்ளவர்களின் முடிவைப் பற்றி தாவீது எழுதி வைத்திருக்கிறார்.
எனவே உங்கள் நடுவில் இல்லாத ஒரு நபரைப் பற்றிய பேச்சுக்களை தவிர்த்துவிடுங்கள். அதிலும் மற்றவர்களின் குறைகளைப் பற்றி அவர்கள் இல்லாத நேரம் பேசவே செய்யாதீர்கள். இது உங்களைப் பற்றிய மதிப்பை உயர்த்தும். நீங்களும் உங்கள் நாவால் பாவம் செய்யாதபடி உங்களைப் பாதுகாக்கும்.
சிந்தனை : இன்று நீங்கள் கெடுத்த பெயரை நாளை நீங்களே சரி செய்ய நினைத்தாலும் முடியாது.
ஜெபம் : தேவனே, என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்; சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும். துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும் அக்கிரமக்காரருடைய கலகத்துக்கும் என்னை விலக்கி மறைத்தருளும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org