தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
நீதி நியாயம்
நான் பெர்மன் என்பவர் ”எல்லாம் போதும்” என்ற ஒரு வியாபாரத்தைத் துவங்கினார். அதில் சுமார் 13 லட்ச ரூபாய் முதலீடு செய்தார். அவர் ”இன்றைய உலகத்துக்கான புதுமையான பழிவாங்குதல்” என்று தனது வியாபாரத்துக்கு விளக்கம் கொடுத்தார். பழி வாங்க விரும்புபவர்கள் இவரது கடையிலிருந்து பொருட்களை அனுப்பி பழிவாங்கலாம். பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த ஒரு கணவனுக்கு மூன்று செத்த மீன்களை பார்சலாக அனுப்பி வைத்தார். தனது தோழியை பொருத்தமானவள் அல்ல என்று சொன்ன ஒரு வழக்கறிஞருக்கு எரிந்து போனதும் கசங்கியதுமான உடையை அனுப்பினார். அவரது பரிசுப் பொருட்களில் கருப்புப் பெட்டியில் வைக்கப்பட்ட 13 காய்ந்த ரோஜாக்கள் ரூபாய் ஆயிரத்துக்குக் கிடைக்கும். முரடரான ஒரு நபருக்கு கள்ளிச் செடி ஒன்றைப் பரிசாக அனுப்பி இதின் மேல் உட்காரு என்று எழுதி அனுப்பியிருக்கின்றார்.
பழி வாங்குதல் கடவுளுடையது என்றே வேதாகமம் சொல்கிறது. நமக்கு கொடுக்கப்பட்ட ஒரே பழிவாங்குதலின் வாய்ப்பானது, எதிரிகளுக்கு நன்மை செய்வதுவும், அவர்களுக்காக ஜெபிப்பதுவும் தான். ஏனென்றால் கடவுளைப் போல எல்லோருடைய மனதையும் அறிந்து சரியான தீர்ப்பு செய்ய நம்மால் முடியாது. தண்டனையையும், பாராட்டையும் அவரைப் போல சரியாகச் செய்யவும் நம்மால் முடியாது. ஆகவே தான் நமது பிரச்சனைகளை நீதியுள்ள நீதிபதியாகிய கடவுளிடம் சொல்லிவிட்டு அமைதியாக இருக்க வேண்டும். அவர் நியாயம் செய்கிறவர் என்பதை மனிதர்களுக்கு நிரூபிப்பார். “மவுனமாயிருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாய் நீதியைப் பேசுவீர்களோ? மனுபுத்திரரே, நியாயமாய்த் தீர்ப்புசெய்வீர்களோ?” என்று கேள்வி கேட்டது போலவே, “மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாய் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான்” என்றும் பதிலளிக்கிறார் தாவீது.
சிந்தனை : அநீதி தலை தூக்கியிருப்பதால் நீதி செத்துவிட்டது என்று சொல்ல முடியாது. நீதியின் தேவன் உயிருடனும் வல்லமையுடனும் இருக்கிறார்.
ஜெபம் : ஆண்டவரே நீர் நீதியுள்ளவர் என்பதை இன்னும் ஒருமுறை நிரூபித்தருளும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org