தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
அல்வா
அமெரிக்காவில் வெள்ளையர்களும் கருப்பர் இனத்தவர்களும் பள்ளியில் ஒன்றாகப் படிக்கலாம் என்ற சட்டம் வந்தாலும், ரூபி என்னும் ஆறுவயது கருப்பர் இனத்துப் பெண் பல கஷ்ட்டங்களை அனுபவித்தாள். பள்ளியில் அவள் ஒருத்தி தான் கருப்பர் இனத்தவளாக இருந்தாள். தினமும் காவலர்கள் அவளை பள்ளிக்கு அழைத்துச் சென்று திரும்பவும் அழைத்து வருவார்கள். வெள்ளைக் குழந்தைகளின் கிண்டல் மற்றும் அவர்களைக் கொண்டு வரவும் கூட்டிச் செல்லவும் வரும் பெரியவர்களின் மிரட்டலையும் அவள் சந்திக்க வேண்டியிருந்தது. ரூபியோ மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தாள்; இரவில் நன்றாகத் தூங்கினாள் என்று அவளது மருத்துவர் கவனித்தார். ஒரு நாள் காலையில் மற்றவர்கள் கோபத்துடன் திட்டிக் கொண்டிருந்த போது ரூபியின் உதடுகள் மெதுவாக முணுமுணுப்பதை ஆசிரியை கவனித்தார். பின்னர் அதைப்பற்றி விசாரித்தார். ”நான் அவர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தேன். இவர்களை மன்னியுங்கள் ஆண்டவரே, அவர்கள் மோசமாகப் பேசினாலும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. ஆகவே நீர் உம்மைத் துன்பப்படுத்தினவர்களை மன்னித்தது போல இவர்களையும் மன்னியும்” என்று சொன்னேன் என்றாள் ரூபி.
தாவீதுக்கு இருந்தது போல நமக்கு அதிகமான எதிரிகள் இல்லாமல் இருக்கலாம். நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களை எல்லாம் எதிரிகளாகப் பார்க்கவும் கூடாது. ஆனால் நாம் நேர்மையாக இருப்பதால், இயேசுவைப் பின்பற்றுவதால் நேரடியாகவோ மறைமுகமாகவோ நாம் பகைக்கப்படலாம். அப்படி நேரங்களில் நாம் ஆண்டவரை மட்டுமே நோக்கிப் பார்க்க வேண்டும். ஏனென்றால் நியாயம் செய்பவரும், நமக்கு பாதுகாப்பு தருபவரும் அவர் மட்டுமே. நமக்குத் தெரியாமலேயே நம்மை எதிரியாகப் பார்ப்பவர்களிடம் இருந்தும் அவர் நம்மைக் காப்பார்.
சிந்தனை : எதிரிகளை நேசிப்பதால் அவர்களை இல்லாமல் செய்துவிடலாம்.
ஜெபம் : என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர் ; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org