தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
தீராதாகம்
சென்ற ஆண்டு மறைந்த புகழ்பெற்ற எழுத்தாளர் ஜான் அப்டைக்கின் ‘ஒரு மாதம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகள்’ என்ற நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம் தனது இளம் வயதில் ஆலயத்தில் ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி நினைவுபடுத்திச் சொல்வது போன்ற ஒரு இடத்தில் இப்படியாகப் பேசும் வசனம் இருக்கின்றது. “கொக்ககோலாவுக்கு விளம்பரப் பலகைகள் இருப்பது போல, கடவுளுக்கு ஆலயங்கள் இருக்கின்றன. அவைகள் தாகத்தை அதிகரிக்கின்றன ஆனால் அதைத் தீர்ப்பதற்கு எதையும் செய்வதில்லை.”
தாகம் என்பது மனிதனுக்குத் தேவையான ஒன்று. தண்ணீர் இல்லாமல் மனிதனின் ரத்தம் சுத்திகரிக்கப்பட முடியாது. உணவு செரிக்காது. தோல்கள் சுருங்கிவிடும். இதற்காகத் தான் தாகம் நமக்கு வருகின்றது. கிறிஸ்தவர்களின் வாழ்க்கையானது மற்றவர்களின் வாழ்வில் கடவுள் மீதான தாகத்தை உருவாக்கி அவர்களுக்குத் தேவையான கடவுளை அவர்களே கண்டு, ஜீவ நதியாகிய இயேசுவில் தாகம் தீர்க்கப்பட வழி காட்ட வேண்டும்.
ஆனால் அதற்கு முன்பாக, நம் வாழ்க்கையில் கடவுள் மேலான தாகம் ஏற்பட வேண்டும்.அதுவும் தினமும் ஒவ்வொரு நேரமும் தொடர்கிறதாக இருக்க வேண்டும். நாம் தாகம் தீர்க்கப்படாமல் அடுத்தவர்களுக்குத் தாகம் தீர்வதற்கான வழிகளைச் சொல்ல முடியாது.
சிந்தனை : தாகம் தீர்க்கப்பட்டவர்கள் தாகமுள்ளவர்களை அலட்சியம் செய்யக் கூடாது.
ஜெபம் : என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் ... உம்மை நினைக்கிறேன். என் தாகத்தைத் தீரும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org