தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 26 நாள்

கசக்கிக் கட்டு

திருமணத்தில் மணமக்களை மதிப்பதற்காகவே நல்ல உடை உடுத்துகிறோம். வேலைக்குப் போகும் போது நிறுவனம் சொல்லும் ஆடைகளைத் தான் உடுத்துகிறோம். பிறரிடம் நல்ல பெயர் வாங்க குறிப்பிட்ட உடை உடுத்துகிறோம். ஆலயம் போகும் போது நாம் எப்படிப்பட்ட உடைகளை உடுத்துகிறோம்?  வெளி அலங்காரம் மட்டும் போதுமா? ஆலயத்துக்கு என்று நாம் விலை உயர்ந்த துணிகள் வாங்க வேண்டுமா? என்றெல்லாம் கேள்விகள் இருக்கலாம். இங்கே அலங்காரம் என்று சொல்லப்படுவது வெளிப்புறமான உடைகள் மற்றும் நகைகளைக் குறிப்பது அல்ல. பரிசுத்த அலங்காரம் என்பது நம்மிடம் உள்ள நல்ல செயல்கள் மற்றும் குணங்களைக் குறிக்கின்றது. நமது உண்மையான பக்தி மற்றும் துதிகளைக் குறிக்கின்றது.

பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள் - நமக்கென்று ஏதாவது பலம் இருக்கும் என்றால், நமது பெற்றோர் பலவான்களாக, சிறப்பானவர்களாக இருந்தால் அதற்குரிய மகிமையை கடவுளுக்குச் செலுத்த வேண்டும். நமது நல்ல நிலைமைக்குக் காரணம் கடவுள் தான் என்று அவருக்கே புகழை செலுத்த வேண்டும். அவரது வல்லமை தான் இவற்றிற்கெல்லாம் காரணம் என்று சொல்ல வேண்டும்.

கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள். கடவுளின் குணங்களே அவரது பெயர்களாக இருக்கின்றன. அவரது பெயருக்கான புகழை அவருக்குச் செலுத்த வேண்டும். உதாரணமாக கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார். ராஜா என்பது அவர் நமது வாழ்க்கையை முழுமையாக ஆட்சி செய்கிறார் என்ற அர்த்தத்தைத் தருகின்றதா?

சிந்தனை : தாவீது ராஜா, கடவுளை ராஜா என்கிறார். ராஜாதிராஜா நம்மை ஆட்சி செய்தால் நம்மில் பரிசுத்த அலங்காரம் இருக்கும்.

ஜெபம் : ஆண்டவரே உமக்குப் பிரியமான அலங்காரத்தை எனக்குத் தாரும். ஆமென்.

நாள் 25நாள் 27

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org