தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 24 நாள்

அஞ்சான்

காரி ஹாகன் என்பவர் 1985-இல் தென் ஆஃப்ரிக்காவுக்குச் சென்றார். அங்கு இனவெறியை ஒழிக்கப் போராடிய திருச்சபையைச் சார்ந்த ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அவர் சென்ற மூன்றாவது நாளில் கருப்பினத்தவர் வாழ்ந்த நகரம் ஒன்றில் ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது. போதகர்கள் சிறைவைக்கப்பட்டனர், கருப்பர்கள் அடிக்கப்பட்டனர். பல இனத்தவர் பங்கு பெற்ற ஆராதனையில் அனுமதி பெறாமல் கலந்து கொண்டார் என்பதற்காக ஹாகன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் அங்கிருந்த நிலைமையைச் சொல்லும் போது, “கருப்பர்களும், வெள்ளை நிறத்தவரும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தனர். அந்த சூழலில் கிறிஸ்தவர்களுக்கு சிறிதும் பயம் என்பதே இல்லாமல் இருந்தது. சரியானதைச் செய்யும் யாருமே நசுக்கப்படுவார்கள் என்ற நிலை இருந்தது. கிறிஸ்தவர்கள் சரியானதை மட்டுமே செய்தார்கள். அவர்களது அந்த வாழ்க்கைக்குக் காரணம், இயேசு போதித்தவைகள் யாவும் உண்மை என்று அவர்கள் உண்மையிலேயே நம்பினார்கள். நானும் எந்த அளவுக்கு இயேசுவின் போதனைகள் உண்மையானவைகள் என்று நம்பினேனோ அந்த அளவுக்குத் தான் பயப்படாமல் இருந்தேன் என்பதையும் புரிந்து கொண்டேன்” என்றார்.

நம் வாழ்விலும் இயேசுவின் போதனைகளை நம்பினால் பயம் இல்லாமல் இருக்கும். என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன். நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன். என்று தனது பயமில்லாமைக்குக் காரணத்தைச் சொல்கிறார் தாவீது.
 

சிந்தனை : விசுவாசமும் தைரியமும் ஒன்றுக்கொன்று நேரடியான தொடர்பு உள்ளது. ஒன்று கூடினால் மற்றதும் கூடும்.

ஜெபம் : கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும். ஆமென்.

நாள் 23நாள் 25

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org