தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 23 நாள்

உத்தமன் 

ஒரு வாலிபனிடம் வேலைக்கான விண்ணப்பத்தை நிரப்பிக் கொடுக்கும்படி சொன்னார்கள். உனது தனிப்பட்ட நிறைகளை பட்டியலிட்டு எழுதுக என்று கேட்கப்பட்ட கேள்விக்கும் ”நான் சில நேரங்களில் நம்பிக்கைக்கு பாத்திரமாக, விசுவாசமாக, உதவிகரமாக, நட்புடன், மரியாதையாக, நல்லவனாக, கீழ்ப்படிபவனாக, மகிழ்ச்சியுள்ளவனாக, நேர்மையுள்ளவனாக, தைரியமானவனாக, சுத்தமானவனாக, பக்தியுள்ளவனாக இருப்பேன்” என்று பதில் எழுதினான். உனது குறைகள் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ”நான் சில நேரங்களில் (மட்டுமே) நம்பிக்கைக்கு பாத்திரமாக, விசுவாசமாக, உதவிகரமாக, நட்புடன், மரியாதையாக, நல்லவனாக, கீழ்ப்படிபவனாக, மகிழ்ச்சியுள்ளவனாக, நேர்மையுள்ளவனாக, தைரியமானவனாக, சுத்தமானவனாக, பக்தியுள்ளவனாக இருப்பேன்” என்று பதிலளித்தானாம்.

இந்த உலகத்தில் யாருமே நூறு சதவீதம் உத்தமர்கள் இல்லை. ஆனாலும் கடவுளின் பார்வையில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதுவே முக்கியம். தனது உத்தமத்தைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொண்டு தாவீது தனது தெருவைச் சுற்றி வரவில்லை, கடவுளின் ஆலயத்தில் பீடத்தையே சுற்றி வருகிறார். மக்கள் பாராட்டுக்காக (பரிசேயர் போன்றோர் அப்படிச் செய்வார்கள்) அவர் தனது குற்றமில்லாமையைப் பற்றிச் சொல்லவில்லை. தனக்கு இரக்கம் தரவும் தன்னைப் பாதுகாக்கவும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறார் தாவீது. அநியாயக்காரரைப் போன்ற முடிவு எனக்கு வரக்கூடாது என்று மன்றாடுகிறார்.

நமது ஜெபங்களும் நம்மைப் பற்றி கடவுளிடம் சொல்வதாக, நமக்கு உதவி கேட்பதாக இருக்க வேண்டும். பெருமையாகத் தம்பட்டம் அடிப்பதாகவோ, பிறர் கேட்பதற்காகவோ இருக்கக் கூடாது.

சிந்தனை : பீடத்தைச் சுற்றினால் கடவுள் கருணை கிடைக்கும். மன்னிப்பும் கிடைக்கும். உலகத்தைச் சுற்றினால் மக்களின் பாராட்டு மட்டுமே கிடைக்கலாம்.

ஜெபம் : கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும். ஆமென்.

நாள் 22நாள் 24

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org