தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
மலையேறு கொடி நாட்டு
கடவுளுடைய பர்வதத்தில் ஏறுதல் எளிதாயிருக்கலாம். ஆனால் அங்கேயே நிலைத்திருப்பது தான் முக்கியமானதாகும். இது ஒரு நாட்டைப் பிடித்தபின் கொடி நாட்டி ஆட்சியை அமைப்பதற்கு ஒப்பானது. நாம் நமது கிறிஸ்தவ வாழ்வில் சில நன்மைகளைச் செய்வது உண்மை தான். ஆனால் ஒரே ஒரு நாள் நல்ல செயல் ஒன்றை செய்துவிட்டு அந்தக் கதையை வைத்தே வருடக்கணக்கில் ஓட்டிக் கொண்டிருக்க முடியாது. நாம் வேதத்தின்படி நடப்பது மட்டுமல்லாமல் அதைத் தொடர்ந்து கைக்கொள்ள வேண்டும். யார் இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெறுவார்கள் என்று தாவீது ஒரு பட்டியலைத் தருகிறார்.
கைகளில் சுத்தம் என்பது நமது செயல்களில் காணப்படும் நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களைச் செய்யாத கைகளைக் குறிக்கும். லஞ்சம், கொள்ளை, கொலை போன்றவை நிஜமாகவே ஒரு மனிதன் தன் கைகளால் செய்யக்கூடிய தீய செயல்களாக இருக்கின்றன. தான தர்மங்கள், உதவிகள் போன்றவை கைகளால் செய்யப்படும் நல்ல விஷயங்களாகும். இருதயத்தில் மாசில்லாத நிலை என்பது நமது மனதிலேயே பாவ சிந்தனைகள் வராமல் பாதுகாப்பதாகும். ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமல் இருப்பது என்பது பொய்யை நம்பாமல் இருத்தல் ஆகும். கபடாய் ஆணையிடாமலும் இருப்பது என்பது தான் செய்யப் போவதைப் பற்றிச் சொல்லுதலும், சொல்லியதை எப்படியும் செய்து முடிப்பதுவுமே ஆகும்.
இந்தப் பட்டியலில் உள்ளவைகளை ஒரு தடவை செய்வது கடவுளின் பர்வதத்தில் ஏறுவது என்றால், தினமும் அதைத் தொடர்ந்து செய்வது என்பது அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பதற்கு சமமானதாகும்.
சிந்தனை : மலையேறுதல் பலருக்கு விளையாட்டாக, பொழுது போக்காக இருக்கலாம்; மலையிலேயே குடியிருக்கப் போகிறவனுக்கு அது வாழ்க்கை.
ஜெபம் : ஆண்டவரே உமக்குப் பிரியமாக நடக்கவும், அதே வாழ்க்கையில் தொடர்ந்து நிற்கவும் எனக்கு கிருபை செய்யும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org