தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
பாத்திரர்
துதிக்குத் தகுதியானவர் கடவுள் ஒருவரே. அவர் ஒருவரே எல்லாவற்றையும் படைத்தவர். அனைவரையும் படைத்தவர். மனிதர்கலைத் துதிக்கும் போது அது தகுதியில்லாததாக இருப்பதுடன், பொய்யாகவே இருக்கிறது. ஆனால் கடவுளை எவ்வளது துதித்தாலும் அது போதாது. இந்த உலகத்தில் பிரபலங்களை வாழ்த்தியவர்களும், வாழ்த்துப்பெற்ற பிரபலங்கள் இருதரப்பினருமே ஒரு நாள் இறந்து போகத்தான் போகிறார்கள். ஆனால் என்றென்றும் வாழ்ந்திருக்கும் கடவுள் துதிக்குப் பாத்திரர். மேலும் அவரைத் துதிப்பவர்களுக்கும் அவருக்குப் பிரியமாக வாழ்பவர்களும் என்றென்றும் அவரோடு வாழ்ந்திருக்கும் நித்திய வாழ்வை மோட்சத்தில் தருகிறார். அத்துடன் நித்திய காலமாக அவரைத் துதிக்கும் பாக்கியமும் நமக்குக் கிடைக்கும்.
துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவதால் எப்படி எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்பட முடியும்? தாவீது கடவுளைத் துதிக்கப் பயன்படுத்தும் ஒவ்வொரு பெயர்களையும் கவனியுங்கள். அந்த ஒவ்வொரு பெயரும் கடவுளின் உண்மையான குணத்தைத் தெரிவிக்கின்றது. துதிக்குப் பாத்திரர் என்றால் அவரது குணமும் உண்மை தான் என்று அர்த்தம். கீழ்க்கண்ட குணங்களுள்ள கடவுள் நமது பக்கத்தில் இருந்தால் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுவது எத்தனை உறுதியானது!
கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும் நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார். உன்னதமானவர், ஆதரவாயிருந்தார், தயவுள்ளவனுக்கு தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு உத்தமராகவும்; புனிதனுக்கு புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு மாறுபடுகிறவராகவும் தோன்றுகிறவர். என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார். கர்த்தர் ஜீவனுள்ளவர்.
சிந்தனை : கடவுளின் பெயர் ஒன்றை மட்டும் எடுத்துத் தியானித்து துதியுங்கள். அது உங்கள் வாழ்விற்கு என்ன அர்த்தம் தருகிறது என்று கண்டுபிடியுங்கள்.
ஜெபம் : கர்த்தாவே உம்மைத் துதிக்கும் துதி என் உதடுகளில் மட்டுமல்ல என் வாழ்க்கை முழுவதிலும் இருக்கட்டும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org