தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
சொத்து
ஒரு விவசாயி இறக்கும் போது 17 கழுதைகள் அவருக்கு இருந்தது. அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவரது உயிலில் மூத்தமகனுக்குப் பாதி கழுதைகளும், இரண்டாவது மகனுக்கு மூன்றில் ஒரு பங்கும் கடைசி மகனுக்கு ஒன்பதில் ஒரு பங்கும் கொடுக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். குழம்பிப் போன அவர்களுக்கு உதவி செய்ய இன்னொரு ஊரிலிருந்து ஒருவர் வந்தார். அவர் தனது கழுதையையும் கூட்டத்தில் சேர்த்து 18 கழுதைகளை நிறுத்திவிட்டார்.
மூத்தவனுக்குப் பாதி - 9 கழுதைகள்
அடுத்தவனுக்கு மூன்றில் ஒன்று 6 கழுதைகள்
கடைசி மகனுக்கு ஒன்பதில் ஒன்று 2 கழுதைகள் என்று பிரித்துக் கொடுத்தது போக அவரது கழுதை நின்று கொண்டிருந்தது அதை அழைத்துக் கொண்டு அவர் போய்விட்டார்.
தாவீதுக்கு சிறப்பான இடங்களில் பங்கு கிடைத்ததாகச் சொல்கிறார். அவருக்கு என்று கடவுள் கொடுத்த பங்கு அவருக்குக் கிடைத்தது. ஆகவே அவர் வேறு எதற்காகவும் ஆசைப்படாமல் திருப்தியுடன் இருக்கின்றார். ”என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்” என்றார், அத்துடன் ”ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.” என்று தனக்கு அதிக மதிப்புள்ள விஷயங்களைப் பற்றிச் சொல்கிறார். உலகத்தின் சொத்துக்கள் பங்குகளைவிட இப்படிப்பட்ட ஆண்டவர் மட்டுமே தரக்கூடிய ஆசீர்வாதங்களே சிறப்பான சுதந்தரம் என்கிறார் தாவீது.
சிந்தனை : நாம் எதை விலையுயர்ந்த பங்கு என்று நினைக்கிறோமோ அதுவே நம் மனதை நிறைத்திருக்கும்.
ஜெபம் : ஆண்டவரே நீரே போதும் என்று சொல்லும் மகிழ்ச்சியான வாழ்க்கையை எனக்குத் தாரும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org