தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 2 நாள்

திருப்தி

ஒவ்வொரு கலாச்சாரத்திலும் அறுவடை என்பது மிகவும் மகிழ்ச்சியான காலம் தான். தானியங்கள் உணவுக்காக கிடைத்திருப்பதுவும், அதிகமாக இருப்பதை விற்பதுவும் அடுத்த அறுவடை வரை மகிழ்ச்சியைத் தரக்கூடியது. தாவீது தனக்குக் கடவுள் தந்த மகிழ்ச்சியைப் பற்றிச் சொல்லும் போது அறுவடையில் தானியமும் திராட்சை ரசமும் பெருகியிருக்கும் போது மக்களுக்கு இருக்கும் மகிழ்ச்சியைவிட அவருக்கு அதிக மகிழ்ச்சி இருப்பதாகச் சொல்கிறார்.

கடவுள் தரும் மகிழ்ச்சி அறுவடை காலத்தைவிட ஏன் அதிக மகிழ்ச்சியாக இருக்கின்றது?:

* தானியங்கள் தீர்ந்து போனாலும் கடவுள் உடன் இருக்கிறார். தேவைகளைத் தருகிறார்.

* தானியங்களும், பானங்களும் தீர்க்கின்ற பசி மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கலாம். ஆனால் கடவுளின் பிரசன்னம் நம்முடன் விலகாமல் இருக்கும்.

* தானியங்கள் விஷயத்தில் இருப்பது போல எதிர்காலத்தைக் குறித்த கவலை தேவையில்லை. பாதுகாப்பாக வைக்க வேண்டுமே என்ற கவலையும் இல்லை. திருடர்கள் திருடவும் முடியாதது கடவுள் தரும் மகிழ்ச்சியாகும்.

சிந்தனை : திருப்தி என்பது மனிதனுக்கு ஏற்படவே முடியாது. திருப்தி தரும் கடவுள் உடன் இருந்தால் மனரம்மியம் கிடைக்கும். 

ஜெபம் : ஆண்டவரே உம்மிலே திருப்தி கண்டு இருப்பதற்காக உமக்கு நன்றியுடன் வாழ எனக்கு அருள் தாரும். ஆமென்.

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org