தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 5 நாள்

எக்ஸ்ரே

ஒரு இளம் பெண்ணும் அவரது பாட்டியும் உட்கார்ந்து தங்கள் குடும்பத்தின் உறுப்பினர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். பாட்டி மிகவும் பக்தியும் பிறரை மன்னிகிறதுமான ஒரு பெண். “அந்த ஆள் மோசமானவர். அவரை நம்பவே முடியாது. மேலும் அவர் ஒரு சோம்பேறி” என்றார் இளம் பெண். “ஆமா அவர் மோசம் தான், ஆனால் இயேசு அவரை நேசிக்கிறார்” பாட்டி சொன்னார். “அது தான் எனக்கு நிச்சயமாத் தெரியல” என்றார் இளம்பெண். “ஆமா இயேசு அவரை நேசிக்கிறார். நாம தெரிஞ்சுவச்சிருக்கிற மாதிரி இயேசு அவனத் தெரிஞ்சிருக்க மாட்டார்.” என்று பதில் சொன்னார் பாட்டி. நமக்கு பிறரைப் பற்றிப் பேசுவதில் அதிக மகிழ்ச்சி இருக்கும். ஆனால் குறைகளை மட்டுமே அதிகமாகப் பார்ப்பது நமது சுபாவம். ஆனால் ஒவ்வொரு மனிதர்களின் பலகீனங்களையும், மனம் வருந்தி அவர்கள் போராடுகிறதையும் கடவுள் மட்டுமே அறிவார். 

தாவீது அவரது எதிரிகளிடமிருந்து காப்பாற்றும்படி கடவுளிடம் ஜெபிக்கும்போதே தனது வாழ்வில் இருக்கும் உண்மையைப் பற்றியும், தான் ஒரு நிரபராதி என்றும், மக்கள் அவரை அநியாயமாகக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்றும் சொல்கிறார். இதிலிருந்தே தாவீதின் உள்ளான மனதில் இருக்கும் நேர்மையும் அதை எழுதி வைக்கும் அவரது துணிச்சலும் தெரிகின்றது. இருதயங்களை சோதித்து உண்மையை அறிகிற கடவுள் நீதியுடன் அவரவருக்குக் கொடுக்க வேண்டிய தண்டனைகளையும், நன்மைகளையும் கொடுப்பார் என்றும் தாவீது சொல்கிறார். நீதியுள்ள கடவுள் நமது இருதயங்களை சோதிக்கிறபடியால் நாம் கவனமாக இருக்க வேண்டும் அத்துடன் அவர் நீதி செய்வார் என்னும் நம்பிக்கையில் அநீதியைத் தாங்கிக் கொள்ளலாம்.

சிந்தனை : ஆண்டவரைப் போல யாரும் நமது இருதயத்தைப் பார்க்க முடியாது. அதுவே நமக்கு எச்சரிக்கையையும், ஆறுதலையும் தருகிறது.

ஜெபம் : என் இருதயத்தைப் பார்ப்பவரே, எனது ஜெபங்களைக் கேளும். எனக்குப் பதில் தாரும். ஆமென்.

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org