யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள் மாதிரி

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

17 ல் 12 நாள்

தங்களது அன்பின் வெளிப்பாடாக சீடர்கள் இயேசுவின் கட்டளைகளைக் கைகொள்ள அழைக்கப்படுகிறார்கள். அவர்களோடும் அவர்களுக்குள்ளும் நெருக்கமாக உறையும் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளரை இயேசு வாக்குப்பண்ணுகிறார். ”வேரொரு தேற்றரவாளரை” என்று சொல்வதால் முந்தின தேற்றரவாளர் இயேசுவே என்று பொருள் கொள்ளலாமா? (கவனிக்கவும்: தூய ஆவியானவர் பற்றிய முதல் கூற்று: "அவர் சத்திய ஆவி”. ஏனைய கூற்றுக்களைப் பிறகு காண்போம்.)

அன்புத் தங்கை, தம்பி, ஆவியானவர் உன்னோடு எப்படிப் பேசுகிறார்? அவருக்குக் கீழ்ப்படிக்கிறாயா? கீழ்ப்படியாவிட்டால் அவரை நீ துக்கப்படுத்துகிறாய் (எபே. 4:30). அவரை மகிழ்வி. இயேசுவின் கற்பனைகள் கைக்கொள்ளக் கடினமானவைகளா? உனக்கு யார் உதவக்கூடும்? இயேசுவையே கேட்டுப்பாரேன்!

ஜெபம்:

இயேசுவே, என் முதன்மை ஆலோசகரே, எனக்குள் உறையும் சத்திய ஆவியாகிய தேற்றரவாளருக்காக உம்மைத் துதிக்கிறேன். நான் உம்மை நேசிக்கிற அளவுக்கு உமக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவி செய்யும்.

இயேசுவின் பதில்…….

என் குழந்தாய், நீ என்னை நேசிக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை மறந்துவிடாதே. என் கற்பணைகளை  பின்பற்றுவது கடினம் என்பதும் எனக்குத் தெரியும். திடன் கொள்; நான் எப்பொழுதும் உன்னோடும் உனக்குள்ளும் இருக்கிறேன். நாம் இருவருமாக இணைந்து வெற்றி கொள்வோம். என்மேல் சார்ந்து முயற்சி செய். 


வேதவசனங்கள்

நாள் 11நாள் 13

இந்த திட்டத்தைப் பற்றி

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள். எளிய நடைமுறை செய்தியும். சிறு ஜெபமும். இயேசு நம்மிடம் பேசினால் என்ன சொல்வார் என்ற ஒரு வாக்கியமும் இருக்கின்றன.

More

இந்த திட்டத்தை வழங்கிய பிஷப் ஜேம்ஸ் சீனிவாசனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://yaway.org