யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள் மாதிரி

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

17 ல் 16 நாள்

தம்முடைய சீடரிடம் விடைபெறுகிற இயேசு இறுதியில்‘”என்னுடைய சமாதானத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்று சொல்லுகிறார். இது இறையருள் வேண்டும் வளமான வாழ்த்துதல். போகிற போக்கில் “GOOD BYE” என்று நாம் சொல்வதுபோல் இல்லை, சூறாவளி சூழலிலும் அவர் அனுபவித்த ஆழ்ந்த அமைதியைச் சீடரின் பங்காக்குகிறார். பிதாவில் கொண்ட முழு நம்பிக்கையின் விளைவாக அவருடைய திட்டத்திற்கு இயேசு தன்னை முற்றிலும் அர்ப்பணித்தபொழுது அவரைத் தாங்கின சமாதானம் இது. சீடர்களின் உள்ளத்திலிருந்த கலக்கத்தையும் அச்சத்தையும் போக்குவதற்கு இந்தச் சமாதானத்தை இயேசு கையளிக்கிறார். தங்களுடைய உள்ளத்தின் அமைதிக்காக மட்டுமல்ல அகில உலகத்தின் சமாதானத்திற்காகவும் சீடர்கள் பொறுப்பேற்க இயேசு எதிர்பார்க்கிறார். சமாதானம் கடவுள் நமக்காகத் தரும் ஈவு மட்டுமல்ல, மற்றவர்களுக்காக நம்மிடம்  ஒப்படைக்கப்பட்ட பொறுப்பும்கூட.  இயேசு சீடருக்கு இருவிதத்தில் மகிழ்சியூட்டுகிறார். நான் மீண்டும் வருவேன் என்பதால் உங்களுக்காக மகிழுங்கள்; மேலும், நீங்கள் என்னை நேசித்தால், என் பிதாவினிடத்திற்குப் போகிற எனக்காகவும் மகிழுங்கள். 

தங்கை, தம்பி! சமாதானம் என்றால் என்ன? ஆழ்மனதிலே அனுபவிக்கும் இனிமையான உணர்வு மட்டும்தானா? சமுதாய அமைப்பிலே நிலவவேண்டிய இணக்கத்தைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உனக்குச் சமாதானமளிக்கும் இயேசு உன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்? நீ இயேசுவை நேசித்தால், அவர் உன்னைவிட்டு போகும்போது அவருக்காக சந்தோஷப்படுவாயா?

ஜெபம்:

இயேசுவே, என் சமாதானப் பிரபுவே, என் இதயத்தின் கலக்கத்தையும் அச்சத்தையும் விரட்டியடிக்க நீர் தந்த சமாதானத்திற்காக நன்றி. நான் உம்மை நேசிக்கிறேன், உமக்காக மகிழுகிறேன். நம் பிதாவினிடத்தில் என்னை நினைவில் வைத்துக்கொள்ளும்.

இயேசுவின் பதில்…….

குழந்தாய், ‘சமாதானப் பிரபு’ என்ற பெயர் எனக்குப் பிடித்திருக்கிறது. நான் பிறந்தபொழுதே தூதர்கள் சமாதானம் பற்றி பாடினார்கள். நான் உனக்குச் சமாதானம் தருகிறேன். சமாதானத்தை நீயும் அனுபவி; அதனை மக்களிடத்திலும் கொடு.

வேதவசனங்கள்

நாள் 15நாள் 17

இந்த திட்டத்தைப் பற்றி

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள். எளிய நடைமுறை செய்தியும். சிறு ஜெபமும். இயேசு நம்மிடம் பேசினால் என்ன சொல்வார் என்ற ஒரு வாக்கியமும் இருக்கின்றன.

More

இந்த திட்டத்தை வழங்கிய பிஷப் ஜேம்ஸ் சீனிவாசனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://yaway.org