யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள் மாதிரி
இயேசு தங்களுக்காக மீண்டும் வருவார் என்பது சீடர்களுக்கு மிகுந்த ஆறுதலளிக்கும் செய்தி. தொடர்ந்து தன்னுடைய உயித்தெழுதலின் விளைவாகச் சீடருக்கு ஜீவனை வாக்களிக்கிறார் (வசனம் 19). மேலும் பிதா, குமாரன் சீடர்களிடையே ஒரு பிணைப்பானது கீழ்ப்படிதல், அன்பு மற்றும் உறவின் (வச. 20-21) அடிப்படியிலே இருப்பதைக் காணலாம். முடிவாக இந்த அன்பு-பணிவு வளையத்தில் சிக்குண்ட சீடருக்குக் குமாரன் சிறப்பாகத் தன்னை வெளிப்படுத்துகிறார்.
இனிய தங்கை, தம்பி, இறைவனோடு இப்படி நீ உறவிலே சிக்குண்ட நிலையை உன்னால் நினைத்துப்பார்க்க முடிகிறதா? இந்த உறவிலே இருக்கும் கொடுக்கல் வாங்கல் புரிகிறதா? உனக்குக் கிடைப்பது கடவுளுடன் உறவு, கடவுளின் அன்பு மற்றும் இயேசுவை அதிகம் புரிந்துகொள்ளும் வாய்ப்பு. நீ கொடுப்பது என்ன? ஆண்டவரை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிந்தாலே போதும்.
ஜெபம்:
இயேசுவே, நான் உம்மோடு இருப்பதற்காக உமது அன்பின் வளையத்திற்குள் என்னை வைத்துக்கொள்ளும். எனக்கு உம்மைக் காட்டும். பிதாவின் அன்பையும் எனக்கு வெளிப்படுத்தும்.
இயேசுவின் பதில்…
குழந்தாய்! நீ, நான், நம் பிதா மற்றும் உன்னைப்போன்ற ஏனைய மக்கள் அனைவரும் ஒன்றாய் இருந்து பிதாவை மகிமைப்படுத்துவோம். நாமும் மகிழ்வோம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள். எளிய நடைமுறை செய்தியும். சிறு ஜெபமும். இயேசு நம்மிடம் பேசினால் என்ன சொல்வார் என்ற ஒரு வாக்கியமும் இருக்கின்றன.
More
இந்த திட்டத்தை வழங்கிய பிஷப் ஜேம்ஸ் சீனிவாசனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://yaway.org