யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள் மாதிரி

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

17 ல் 2 நாள்

இயேசுவின் அன்பின் சேவை பேதுருவுக்கு ஒரு பேரதிர்ச்சி. பேதுரு துடிப்புடன் தடை சொல்லுகிறான். காரணங்கள் என்னவெனில், ஆண்டவர்மேல் கொண்ட மரியாதையும் “தான் தகுதியற்றவன்” என்ற உணர்வும்தான். அதன் பின்விளைவு- ஆண்டவரிடத்தில் அவனுக்குப் ”பங்கில்லை” என்ற தீர்ப்பு. அதைக் கேட்டதும் பேதுருவுக்கே உரிய துடுக்குடன் குளிக்கவே ஆயத்தமாகிறான். தன்னுடன் இணைந்திருப்பது பற்றி இயேசு அவனுக்குப் பொறுமையுடன் விளக்குகிறார். 

தங்கை, தம்பி! நீ நீண்டகாலமாக கிறிஸ்தவள்(ன்)தானே? நீ தூய்மையாய் இருக்கிறாயா? எது உன்னைத் தூய்மைப்படுத்திற்று? இயேசு உன்னை சிறப்பான முறையிலே தூய்மைப்படுத்தின அனுபவம் உனக்கு இருக்கின்றதா? இயேசு ஏதோ ஒரு விதத்திலே உன்னை இன்னமும் தூய்மைப்படுத்த கொஞ்சம் இடம் கொடேன். 

ஜெபம்:

இயேசுவே, தூய ஆண்டவரே, உம்மோடும் உமது மக்களோடும் இணைந்திருப்பதற்கு நீர் எனக்களித்த இந்தச் சிறந்த வாய்ப்புக்காக நான் உம்மைத் துதிக்கிறேன். இன்னமும் என்னைத் தூய்மைப்படுத்தி என்னை உம்மோடு காத்துக்கொள்ளும்.  நீரே என் வாழ்வு.

இயேசுவின் பதில்…….

என் குழந்தாய், உன்னை நான் உள்ளும் புறமும் அறிவேன். உன்னுடைய பெலவீனங்களும் எனக்கு மறைவானவை அல்ல. என் உதிரத்தால் நீ கழுவப்பட்டாய். உன்னை நான் தொடர்ந்து தூய்மைப்படுத்துவேன். என் இதயத்தில் உன்னைக் காத்துக்கொள்வேன். நீ எனக்குச் சொந்தம்!

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள். எளிய நடைமுறை செய்தியும். சிறு ஜெபமும். இயேசு நம்மிடம் பேசினால் என்ன சொல்வார் என்ற ஒரு வாக்கியமும் இருக்கின்றன.

இந்த திட்டத்தை வழங்கிய பிஷப் ஜேம்ஸ் சீனிவாசனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://yaway.org

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்