யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள் மாதிரி

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

17 ல் 3 நாள்

”செயலாற்றும் அன்பு” பற்றிய செயல்முறைப் பாடம் நடத்திய இயேசு சீடருக்குப் போதிக்க அமருகிறார். போதகரும் ஆண்டவருமான அவரே சீடர்களின் கால்களைக் கழுவினாரென்றால் சீடர்கள் ஒருவருக்கொருவர் பணியாற்ற எவ்வளவு கடன் பட்டிருக்கிறார்கள்! பரஸ்பர பணி இறையரசுக்கு உட்பட்ட மக்களின் பண்பு. இப்படி பணிபுரிவதும் பணி பெறுவதும் இன்னிசை போன்ற ஒர் இனிய அனுபவம். 

அன்பு தங்கை, தம்பி! உன் திருச்சபையின் உறவிலே ஒருவருக்கொருவர் பணிபுரியும் இந்த இனிமையை அனுபவித்திருக்கிறாயா? இந்தப் பரஸ்பர பணி தடையின்றி பெருக்கெடுக்க இடையூறுகள் எவை என்று யோசி. ஒருவேளை தடைகள் உனக்குள்ளேயே இருக்கிறதா என்று தன் ஆய்வு செய்து பார். பிறர்க்காற்றும் சேவையில் நீ ஆசியும் ஆனந்தமும் பெற்ற தருணங்கள் நினைவுக்கு வருகிறதா?

ஜெபம்:

ஊழியம் செய்யவே உலகுக்கு வந்த இயேசுவே! நான் தன்னலமற்ற அன்புடனும் மனத்தாழ்மையுடனும் நீர் கற்றுக்கொடுத்ததுபோல நேசிக்கவும் சேவிக்கவும் தேவையான ஒரு பணியாளின் இதயத்தை எனக்குத் தாரும்.

இயேசுவின் பதில்…….

 குழந்தாய், நான் உன்னில் அன்பு கூர்ந்ததுபோல நீ பிறரை நேசிப்பது அவ்வளவு எளிதல்ல. தாழ்மையும் பிறர் அறியாதவண்ணம் செயலாற்றுதலும் கிறிஸ்தவ அன்பின் பண்புகள் என்று மறந்துவிடாதே. நீ அன்பினால் பணியாற்றும்பொழுதெல்லாம் நான் உன்னோடுதான் இருக்கிறேன்.


வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள். எளிய நடைமுறை செய்தியும். சிறு ஜெபமும். இயேசு நம்மிடம் பேசினால் என்ன சொல்வார் என்ற ஒரு வாக்கியமும் இருக்கின்றன.

More

இந்த திட்டத்தை வழங்கிய பிஷப் ஜேம்ஸ் சீனிவாசனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://yaway.org