மோட்சம் உலகத்தை சந்தித்தபோதுமாதிரி

மோட்சம் உலகத்தை சந்தித்தபோது

5 ல் 1 நாள்

உலகம் இழந்து போன மோட்சம்

நாம் கர்த்தரின் சாயலில் படைக்கப்பட்டோம். நாம் ஒவ்வொருவரும். இதில் யாருமே விதிவிலக்கு இல்லை. நம்மை உருவாக்கியவருடன் தொடர்பில் இருக்கும் தன்மையுடனேயே நாம் உருவாக்கப்பட்டோம்.  அத்துடன் பாவம் செய்யும் ஒரு தன்மையைப் புதிர்போல நமக்குள் கொண்டிருந்தோம். ஏவாள் படைத்தவரைவிட பாம்பு சொல்வதைக் கேட்கத் தீர்மானத்ததால், நம் உடல், இதயம், உள்ளம் ஆகியவற்றில் சில  பகுதிகள் உடைந்து போயின. இந்த உலகமும் உடைந்து போன ஒரு நிலைக்குச் சென்றது. அப்போது துவங்கிய வீழ்ச்சியானது, இப்போதும் கூட தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆண்களும் பெண்களும் காயப்பட்டு, சிராய்ப்புடனும், வெறுப்பு, சதி, கொலை, ஒருவரை ஒருவர் கடித்துத் தின்றல் போன்றவைகள் நடக்கின்ற உலகத்தில் வாழ்கிறோம். கர்த்தரின் ஆதி நோக்கமானது உலகத்திலேயே இருக்கும் ஒரு மோட்சமாகும். ஆனாலும் நமது பாவ சுபாவத்தால் உலகத்தில் இருந்த மோட்சமானது தேய்ந்து போனது, நரகம் போன்ற ஒரு உண்மை இந்த உலகத்தில் துவங்கியது.  கர்த்தர் தான் படைத்ததை வரலாற்றின் மிக இருளான காலங்களில் கூட  விட்டுவிடவில்லை. இனி நிலைமை மோசமாகவே போய்விடும் என்று தோன்றும் காலத்தில் அவர் எப்போதுமே சூழலை சரி செய்திருக்கிறார். அவர் தனது மக்களுக்கு பலிகள், நியாயப்பிரமாணங்கள், விதிகள் போன்றவற்றைக் கொடுத்தார். தங்களுக்கு இருப்பதில் சிறப்பானவற்றை பலியாகக் கொடுக்கும் ஆராதனையை செய்யும்படி வைத்திருந்தார். அவரது மக்கள் அவரை ஆராதித்தாலும் அவர்களது அலைபாயும் இதயங்கள் அவர்களைக் கர்த்தரைவிட்டு விலகி அலையச் செய்தன. அதனால் அவர்கள் சிலைகளை வணங்கும் நிலைக்குப் போனார்கள். அவர்கள் கர்த்தருக்கு ஆராதனையாகக் கொடுத்த இரத்தபலி போதுமானதாக இல்லாமல் இருந்தது.  நிரந்தரமாகவும் எல்லாவற்றையும் சரிசெய்வதுமான  ஒரு தீர்வு வேண்டியதாக இருந்தது.


இந்த உலகத்தின் உடைந்த தன்மை உங்கள் வாழ்வில் எந்தப் பகுதியைத் தொட்டிருக்கிறது? உங்கள் மீட்பை நீங்களே சம்பாதிக்க முடியாத போதாமையை நீங்கள் எங்கே காண்கிறீர்கள்? உலகத்திலேயே மோட்சத்தைக் காண நீங்கள் ஏங்குகிறீர்களா?


நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

மோட்சம் உலகத்தை சந்தித்தபோது

கிறிஸ்மஸ் என்பது நம்மைப் பற்றியும் இயேசு இந்த உலகத்துக்கு வந்தது நம் வாழ்க்கையை எப்படி மாற்றியிருக்கிறது என்பதையும் உற்றுப் பார்க்கும் மாபெரும் காலமாகும். மோட்சம் உலகத்தை வெற்றி கொண்டது, நித்தியகாலத்துக்கும் அதை மாற்றிவிட்டது. நமது வாழ்க்கை கடினமானதாக, சிக்கல் நிறைந்ததாக இருக்கலாம். ஆனால் இயேசு உள்ளே இருந்தால் அது நோக்கம் அற்றதாக இருக்காது. மோட்சம் உங்கள் வாழ்க்கையைப் பிடித்துக் கொள்ள அனுமதிப்பீர்களா? கர்த்தரின் பிரசன்னமும் அவரது நோக்கமும் பற்றிய மாபெரும் புரிதலுடன் வாழத்துவங்குவீர்களா?

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.wearezion.co/bible-plan